குய்கோ - இயக்குனர் டி அருள் செழியன் இயக்கத்தில் விதார்த், யோகிபாபு, இளவரசு, வினோதினி வைத்தியநாதன் என பலர் நடித்திருக்கும் நகைச்சுவை & காதல் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அந்தோனி தாசன் இசையமைத்துள்ளார்.
குய்கோ திரைப்படத்தின் கதை
திருவண்ணாமலை மாவட்ட செங்கம் என்பதற்கு அடுத்து உள்ள மலை கிராமத்தில் யோகி பாபு வசித்து வருகிறார். இவர் துர்கா என்னும் ஒரு பெண்ணை காதலித்து வருகிறார். இவரின் காதலை பிடிக்காத துர்காவின் அண்ணன் யோகி பாபு-வை அவமதிக்கிறார். இதனால் யோகி பாபு துபாய் செல்ல முடிவெடுக்கிறார்.
துபாயில் உள்ள ஒரு அரச குடும்பத்தில் ஒட்டகம் மேய்பவராக வேலைக்கு சேரும் யோகி பாபு, நன்றாக பணம் சம்பாரிக்க யோகி பாபு-வுக்கு சொந்த ஊரில் மதிப்பும் மரியாதையும் கூடுகிறது. யோகி பாபுவின் தாய் தீடிரென இறந்து விட யோகி பாபு வந்தவுடன் தான் தாயின் உடலை தகனம் செய்ய வேண்டும் என முடிவெடுக்கின்றனர், ஊர் மக்கள். அதுவரை யோகி பாபுவின் தாயின் உடலை பாதுகாக்க குளிர் சாதன பெட்டி வரவழைக்க படுகிறது.
அந்த பெட்டியை கொண்டு வருபவராக விதார்த் நடித்துள்ளார். யோகி பாபு வந்தவுடன் நல்ல முறையில் அவரது தாயை தகனம் செய்கின்றனர். பின் யோகி பாபு அந்த பெட்டியை வாங்கி தனது தாயின் ஞாபகமாக பூஜித்து வருகிறார்.
யோகி பாபு காதலித்த துர்காவின் தாய் இறந்து விட, அவரது உடலை பாதுகாக்க யோகி பாபு விடம் அந்த பெட்டியை கேட்கிறார், துர்காவின் அண்ணன். பின் யோகி பாபு என்ன முடிவெடுத்தார் என்பதே இப்படத்தின் கதை.