குமாரா சம்பவம் - பாலாஜி வேணுகோபால் எழுதி இயக்கியுள்ள தமிழ் நகைச்சுவை திரைப்படமாகும். குமாரன் தங்கராஜன், பாயல் ராதாகிருஷ்ணா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குமரவேல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் தோன்றியுள்ளனர். இப்படத்திற்கு அச்சு ராஜமணி இசையமைத்துள்ளார், ஜகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார், எடிட்டிங்கை ஜி.மதன் செய்துள்ளார்.
கதை
சினிமாவை உயிராகக் கருதும் குமாரன், தனது கனவு படத்தை உருவாக்க தீர்மானிக்கிறார். முக்கியமான லொக்கேஷனாக தேர்ந்தெடுத்த வீடு பல சிக்கல்களில் சிக்கியிருப்பதை அவர் அறிந்ததும் கதை திருப்பம் பெறுகிறது. எதிர்பாராத பிரச்சனைகள், சிரமங்கள் மற்றும் சவால்களை சமாளித்து, குமாரன் தனது கனவை நிறைவேற்றுவாரா என்பதே இப்படத்தின் முக்கியக் கரு.
வெளியீட்டு தேதி
குமாரா சம்பவம் செப்டம்பர் 12, 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது.