லாக்கர் - இயக்குனர் யுவராஜ் கண்ணன் மற்றும் ராஜசேகர் இணைந்து இயக்கியிருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தில் விக்னேஷ் ஷண்முகம் மற்றும் நிரஜினி அசோகன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, இசையமைப்பாளர் வ்யூகுந்த் ஸ்ரீனிவாசன் இசையமைத்துள்ளார்.
லாக்கர் திரைப்படத்தின் கதை
நாயகன் விக்னேஷ் பலரை ஏமாற்றி வாழ்ந்து வருகிறார். நாயகியை துரத்தி துரத்தி காதலிக்கும் நாயகன், காதலிக்காக தான் செய்யும் திருட்டு தொழிலை விடுகிறார். பின் நாயகனை தனக்காக ஒருவரை ஏமாற்று என கேட்கும் காதலிக்காக மீண்டும் திருட்டு தொழிலுக்கு வருகிறார், நாயகன். பின் என்ன ஆனது என்பதே படத்தின் கதை.