மாணிக் கதை

    மாணிக் இயக்குனர் மார்ட்டின் இயக்கத்தில், மா கா பா ஆனந்த் மற்றும் சுஜா குமார் நடிப்பில் உருவாகியுள்ள நகைச்சுவை காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சுப்பிரமணியன் தயாரிக்க இசையமைப்பாளர் தரேன் இசையமைத்துள்ளார்.

    கதை 

    1980களில் இருந்து தொடங்குகிறது படம். மனோபாலாவிடன் கணக்குப்பிள்ளையாக இருக்கும் மா.கா.பா.ஆனந்த் அவர் பெண்ணை காதலித்ததால் கொல்லப்படுகிறார். மேலோகம் செல்லும் மாகாபா அடுத்த ஜென்மமாக பூமியில் பிறக்கிறார். பிறந்த உடனே அவரை கொன்றுவிடும்படி சாமியார் ஒருவர் கூறுகிறார். ஆனால் தனது குழந்தை மீதான பாசத்தால் மா.கா.பா.வின் அம்மா உயிர் தப்ப வைக்கிறார். பாட்டியின் அரவணைப்பில் ஒரு காப்பகத்தில் வளரும் மா.கா.பா.ஆனந்த், பாட்டி இறந்த பிறகு, தனது நண்பன் வஸ்தவனுடன் சென்னைக்கு வருகிறார். 

    தடைவிதிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐ.பி.எல். போட்டியில் திரும்பவும் விளையாட வைத்து கோப்பையை வெல்ல வைக்க வேண்டும் என சபதம் கொள்கிறார்.இதில் அவர் சாதித்தாரா இல்லையா என்பதை காமெடியுடன் சொல்ல முயல்கிறது மாணிக். பல காமெடிகளை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு, மாணிக் செய்யும் காமெடி ரொம்ப புதுசு. 

    **Note:Hey! Would you like to share the story of the movie மாணிக் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).