மாணிக்

  மாணிக்

  U | Comedy
  Release Date : 04 Jan 2019
  2/5
  Critics Rating
  4.5/5
  Audience Review

  மாணிக் இயக்குனர் மார்ட்டின் இயக்கத்தில், மா கா பா ஆனந்த் மற்றும் சுஜா குமார் நடிப்பில் உருவாகியுள்ள நகைச்சுவை காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சுப்பிரமணியன் தயாரிக்க இசையமைப்பாளர் தரேன் இசையமைத்துள்ளார்.

  கதை 

  1980களில் இருந்து தொடங்குகிறது படம். மனோபாலாவிடன் கணக்குப்பிள்ளையாக இருக்கும் மா.கா.பா.ஆனந்த் அவர் பெண்ணை காதலித்ததால் கொல்லப்படுகிறார். மேலோகம் செல்லும் மாகாபா அடுத்த ஜென்மமாக பூமியில் பிறக்கிறார். பிறந்த உடனே அவரை கொன்றுவிடும்படி சாமியார் ஒருவர் கூறுகிறார். ஆனால் தனது குழந்தை மீதான பாசத்தால் மா.கா.பா.வின் அம்மா உயிர் தப்ப வைக்கிறார்....

  • மார்ட்டின்
   Director
  • எம். சுப்பிரமணியன்
   Producer
  • தரன்
   Music Director
  • பில்மிபீட்
   2/5
   சிங்கிள் ஹீரோ படம் என்பதால் மிகுந்த மெனக்கெடலுடன் நடித்திருக்கிறார் மா.கா.பா.ஆனந்த். துறுதுறுப்பான அவரது நடிப்பு கவர்கிறது. படத்தின் கதை களம் அவருடைய ஏரியா என்பதால், நிறுத்தி நிதானமாக விளையாடி செஞ்சுரி அடிக்க முயன்றிருக்கிறார். ஆனால் 25 ரன்களில் பரிதாபமாக கேட்சு கொடுத்து அவுட்டாகிறார். அடுத்த மேட்சில் நல்லா பெர்பார்ம் பண்ணுங்க மா.கா.பா. சூசா குமார் படம் முழுக்க அழகு தேவதையாக வருகிறார். காதலிப்பதை தவிர வேறு வேலை இல்லை. அவரது அப்ப இறக்கும் காட்சி அனைவரையும் சிரிக்க வைக்கிறது.

   கவுரவ வேடத்தில் வரும் யோகி பாபு சில நிமிடங்கள் சிரிக்க வைக்கிறார். மனோபாலா, மதுமிதா சிரிக்க வைக்க முயற்சித்து இருக்கிறார்கள். நம்மை நன்றாக சிரிக்க வைத்திருந்தால், இந்த 'மாணிக்' - ஐ நாம் பாட்ஷாவாக கொண்டாடியிருக்கலாம்...