மாரி 2 கதை

  மாரி 2 இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், சாய் பல்லவி, டொவினோ தாமஸ், வரலக்ஷ்மி சரத்குமார், கிருஷ்ணா, ரோபோ ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ள அதிரடி நகைச்சுவை திரைப்படம். மேலும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையில், தயாரிப்பாளர் தனுஷின்  வொண்டர் பார் பிலிம்ஸ் இப்படத்தினை தயாரித்துள்ளது.

  திருந்தி வாழ நினைக்கும் முன்னாள் ரவுடிக்கும், அவனை பழிவாங்க துடிக்கும் வில்லனுக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் மாரி 2. மாரி முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகத்தை சிறப்பாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் பாலாஜி மோகன். விறுவிறுப்பான திரைக்கதை, அதிரடி ஆக்ஷன், மாஸ் வசனங்கள், சூப்பர் காமெடி, உருக வைக்கும் காதல் என வெரைட்டியாக இருக்கிறது மாரி 2.

  கதை

  ஹார்பர் பகுதியில் சில பல நல்லதுகளையும் கொஞ்சம் கெட்டதுகளையும் செய்தபடி பக்கா ரவுடி மாரி (தனுஷ்). அவரது "தளபதி " தேவா மம்முட்டி ஆனா  உயிர் நண்பன் கிருஷ்ணா.  இருவரும் சேர்ந்து உள்ளூரில் கெத்துகாட்டி ரவுடியிசம் செய்து வருகிறார்கள். பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிக்கும் ஒருவனை போட்டு தள்ளி அந்த பெண்ணை காப்பாற்றுகிறார் மாரி. இதை பார்க்கு அராத்து ஆனந்திக்கு (சாய் பல்லவி), மாரி மீது காதல் மலர்கிறது. ஆனால் கொல்லப்பட்ட நபரின் தம்பியான பீஜாவுக்கு (டோவினோ தாமஸ்) மாரி மீது பகை உருவாகிறது. 

  மாரியை கல்யாணம் செய்ய வேண்டும் என சாய் பல்லவியும், கொலை செய்ய வேண்டும் என டோவினோ தாமஸும் துரத்துகிறார்கள்.சாய் பல்லவி மீது தனுஷுக்கும் காதல் மலர்கிறது. இந்நிலையில் டோனிடோ சாமர்த்தியமாக காய் நகர்த்தி, தனுஷுக்கும், கிருஷ்ணாவுக்கும் இடையேயான நட்பை முறிக்கிறார். சூழ்ச்சியில் வென்ற மெயின் வில்லன், அந்த ஏரியாவின் மெயின் தாதா ஆகி ஏரியாவை தன் வசம் ஆக்குவதோடு மாரியையும் அவரது காதலி அராத்து ஆனந்தியையும் ஓட ஓட கத்தியால் குத்தியும், துப்பாக்கியால் சுட்டும் விரட்டுகின்றனர். அவர்கள் என்ன ஆனார்கள், வில்லன் டோவினோவை தனுஷ் ஜெயித்தாரா என்பதே மீதிப்படம்.

  "மாரி - 2 '- 'சாரி- டூ என ரசிகர்களுக்கு சொல்லாமல் ஜனரஞ்சமாக வந்திருப்பதே ஆறுதல்

  **Note:Hey! Would you like to share the story of the movie மாரி 2 with us? Please send it to us (popcorn@oneindia.co.in).