மதராசப்பட்டினம் கதை

  மதராசப்பட்டினம் 2010-ம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வெளிவந்த ஒரு அழகான காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்க, ஆர்யா மற்றும் எமி ஜாக்சன் ஒரு முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தினை கல்பாத்தி எஸ். அகோரம் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

  சுவாரஸ்யமான காதல் மற்றும் தேசபதி கொண்ட திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படம், இந்திய ரசிகர்களின் பெரும் கவனத்தை பெற்றுள்ள படமாகும். இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாஹ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஆன்டனி கொன்சால்வேஸ் எடிட்டிங் செய்துள்ளார்.

  இப்படத்தினை கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிக்க, உதயநிதி ஸ்டாலின் "ரெட் கெய்ன்ட் மூவிஸ்" மற்றும் ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தினை உலகம் முழுவதும் விநியோகம் செய்துள்ளது.

   

  மதராசப்பட்டினம் திரைப்படத்தில் பணியாற்றியுள்ள படக்குழு பற்றிய தகவல்கள்

   

  மதராசப்பட்டினம் திரைப்படத்தின் பாடல்கள்

   

  மதராசப்பட்டினம் திரைப்படத்தின் வீடியோ பாடல்கள்

   

  மதராசப்பட்டினம் திரைப்படத்தின் கதை

  இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கப்போகும் தருணத்தில் மதராசப்பட்டினத்தில் வசிக்கும் சலவை தொழிலாளி ஆர்யா. அவரது வீரதீர செயல்களையும், நற்குணங்களையும் யதேச்சையாக கவனிக்கின்ற ஆ‌ங்கிலேய கவர்னரின் மகளுக்கு ஆர்யா மீது காதல். அந்த காதல் தடைகளைத் தாண்டி வெற்றியடைந்ததா தோல்வியடைந்ததா என்பதை கதாநாயகி நினைவலைகளில் இருந்து கூறுகிறது இப்படம்.

  இந்தியா சுதந்திரம் பெரும் சமயத்தில் சென்னை ஆளுனராக இருந்தவரின் புதல்வி ஏமி ஜாக்சன். அவர் சென்னையில் தனது மொழிபெயர்ப்பாளருடன் சுற்றிக் கொண்டிருக்கும் போது ஆர்யா ஒரு ஆட்டுக்குட்டியை காப்பாற்றுவதை காண்கிறார். இதைக் கண்டு ஆர்யா மீது காதல் கொள்கிறார். தொடர்ந்து வரும் சந்திப்புகளில் ஆர்யாவும் ஏமி மீது காதல் கொள்கிறார். இதைத் தொடர்ந்து ஆர்யா, ஏமிக்கு ஒரு தாலியைக் கொடுக்கிறார்.

  ஆனால் சுதந்திரம் கிடைத்த பின்பு இருவரும் பிரிக்கப்படுகிறார்கள். 60 ஆண்டுகளுக்குப் பின் ஆர்யாவிடம் இருந்து பெற்ற தாலியை திருப்பிக் கொடுக்க இந்தியா வரும் ஏமி, ஆர்யா இத்தனை ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் தனது பெயரில் பல நற்பணிகள் செய்து வருகிறார் என்றும் அறிகிறார். இதைத் தொடர்ந்து ஏமியும் ஆர்யாவின் சமாதியின் அருகே உயிர் துறக்கிறார்.

   

  மதராசப்பட்டினம் திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்

  1. இப்படத்தின் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கான உரிமையை கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் பெற்றுள்ளது.

  2. இத்திரைப்படம் சென்னை பாக்ஸ் ஆஃபீஸ் நிலவரத்தில் 15 வாரங்கள் கடந்துள்ள ஒரு வெற்றி திரைப்படமாகும்.

  3. இப்படத்திற்கு பிலிம்பேர் விருது குழு சார்பில், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடலாசிரியர் என பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

  4. இத்திரைப்படம் விஜய் விருதுகள், எடிசன் விருதுகள், மிர்ச்சி மியூசிக் விருதுகள் என பல விருதுகளை பல பிரிவுகளில் வென்றுள்ளது.

  **Note:Hey! Would you like to share the story of the movie மதராசப்பட்டினம் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).