twitter

    மதுரராஜா கதை

    மதுரராஜா இயக்குனர் வைசாக் இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, ஜெய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் நெல்சன் அய்ப் தயாரிக்க, இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.

    இத்திரைப்படம் மலையாளத்தில் 2019 ஏப்ரல் மாதம் 12ல் வெளியாகி வெற்றிப்பெற்றுள்ள திரைப்படம். இத்திரைப்படத்தில் தமிழ் நடிகரான ஜெய், இப்படத்தின் மூலம் மலையாள திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார். நடிகர் ஜெய் நடிப்பில் 2014-ம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படமான வடகறி திரைப்படத்தில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு கௌரவ தோற்றத்தில் தோன்றி நடனமாடியுள்ளார். இதனை தொடர்நது இந்த திரைப்படத்திலும் நடிகை சன்னி லியோன் ஒரு பாடலுக்கு ஜெய்-யுடன் நடனமாடியுள்ளார்.

    மதுரராஜா திரைப்படத்தின் கதை

    கேரளா மாநிலத்தில் உள்ள தனித்தீவு ஒன்றில் மக்களை பயமுறுத்தி தன் ராஜ்யமாக வைத்துக்கொண்டு ஆட்சி செய்து வருகிறார் ஜெகபதி பாபு. இவரின் ஆட்கள் அங்க உள்ள ஒரு பள்ளிக்கு அருகே மதுபான கடை ஒன்றினை நிறுவி அங்கு பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை தொந்தரவு செய்து வருகின்றனர்.

    இதனை கண்டித்து அந்த பள்ளி நிர்வாகம் நடிகர் மம்மூட்டி-யின் தந்தை நெடுமுடி வேணு-யிடம் புகார் தருகிறது. அதனை விசாரிக்க சென்ற நெடுமுடி வேணுவை அவுமானப்படுத்தி அனுப்புகிறார், ஜெகபதி பாபு. இதனை தட்டி கேட்க சென்ற இளையமகன் ஜெய்யை பொய் வழக்கு ஒன்றினை பதிவித்து ஜெயிலில் அடைக்கிறார்.

    தன் அப்பாவை அவுமானப்படுத்திய செய்தியையும், தம்பியை ஜெயிலில் அடைத்த விஷயத்தை அறிந்த மம்மூட்டி தம்பியை காப்பாற்றி ஜெகபதி பாபுவை கொல்ல செல்கிறார். இறுதியில் இவர் தம்பியை காப்பாற்றினாரா? என்பதே படத்தின் கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie மதுரராஜா with us? Please send it to us ([email protected]).