மேகி இயக்குனர் ஆர்.கார்த்திகேயன் ஜெகதீஷ் இயக்கத்தில் புதுமுக நடிகர்கள் ரியா, நிம்மி, ஹரிணி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திகில் திரைப்படம். இத்திரைப்படத்தினை இப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கார்த்திகேயன் ஜெகதீஷ் தனது சாய் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் பிரபாகரன் மெய்யப்பன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
திகில் மற்றும் திரில்லர் படமாக உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் மணி ராஜு மற்றும் படத்தொகுப்பாளர் விக்னேஸ்வரன் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
மேகி படத்தினை பற்றிய பிரத்தியேக தகவல்கள்
இத்திரைப்படம் கொடைக்கானல் காட்டு பகுதியையும் அதைச் சுற்றி உள்ள அழகான பங்களாவையும் மையமாக கொண்டு எடுக்க பட்ட திரில்லர் கதை. இத்திரைப்படத்தில் முக்கிய முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரியா, நிம்மி, ஹரிணி ஆகியோர் இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்குள் நாயகியாக அறிமுகமாகின்றனர்.