X
மஹா
Drama | Thriller | 22 Jul 2022 | U/A | 109 Mins
Tamil

மஹா கதை

மஹா அறிமுக இயக்குனர் யு ஆர் ஜமீல் இயக்கத்தில் ஹன்ஷிகா நடித்திருக்கும் அதிரடி த்ரில்லர் திரைப்படம். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் ஹன்ஷிகா திரைவாழ்வில் இவர் நடித்துள்ள 50 வது திரைப்படமாகும்.

இத்திரைப்படத்தில் ஹன்ஷிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார், சிலம்பரசன் ஹன்ஷிகாவின் பிளாஷ் பேக் காதலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இவர்களுடன் கருணாகரன், மகத், தம்பி ராமையா என பலர் நடித்துள்ளனர்.




மஹா திரைப்படத்தின் கதை

கதைக்கரு

குழந்தைகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யும் சைக்கோ கொலையாளி பற்றிய திரில்லர் கதை தான் மஹா.

கதை

படம் தொடங்கும் போதே ஹன்சிகா மோத்வானி மற்றும் சிம்பு காதல் மற்றும் ரொமான்சுடன் கிளுகிளுப்பாக தொடங்குகிறது. இதையடுத்து 6 மாதங்களுக்கு பிறகு என்ற கார்டுடன் படம் ஆரம்பாகிறது. அதில் ஒரு கொடூர சைக்கோ கொலைகாரன் குழந்தைகளை கடத்தி கொலை செய்கிறான். இந்த கொலைகாரன் கண்ணில் ஹன்சிகாவின் குழந்தை பட, அந்த குழந்தையையும் கடத்தி விடுகிறான். அவனிடம் இருந்து குழந்தை மீட்கப்பட்டதா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதி கதை.

மஹா படத்தின் பிரத்யேக தகவல்கள்

இத்திரைப்படத்தின் தலைப்பில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் அஜித் குமார் நடித்திருந்தார். ஆனால், ஏதோ காரணத்தினால், அப்படம் நிறுத்தப்பட்டத்து. தற்போது அந்த பெயர் தான் ஹன்சிகாவின் படத்துக்கு கிடைத்துள்ளது.
 
இத்திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் கவுரவத் தோற்றத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இதற்காக 7 நாட்கள் கால் சீட்-ஐ தந்துள்ளார். ஏற்கனவே போஸ்டர்களால் இத்திரைப்படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்நிலையில் சிலம்பரசன் - ஹன்ஷிகா ஜோடியானது இந்த படத்திற்கு மேலும் எதிர்பார்ப்புகளை தந்துள்ளது. சிலம்பரசன் நடித்த சில காட்சிகள் இப்படத்திற்கு பலமாக அமைய, சிலம்பரசனை காட்சிகளை நீடித்து நாயகனாக வடிவமைத்துள்ளனர் படக்குழுவினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+