X
மகாராஜா
Action | 14 Jun 2024 | U/A | 142 Mins
Tamil

மகாராஜா கதை

மகாராஜா - இயக்குனர் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தமிழ் திரைப்பட முன்னணி தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் மற்றும் தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

குடும்பங்கள் கண்டு மகிழும் அதிரடி - திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நடராஜன் சுப்ரமணியம், சிங்கம் புலி, அபிராமி, பாரதிராஜா என தமிழ் சினிமா முன்னணி நட்சத்திரங்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

நடிகர் விஜய் சேதுபதி திரைவாழ்வில் இவர் நடிக்கும் 50வது படமாகும், மகாராஜா. இப்படத்தினை பேஸ்சன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ள நிலையில், இப்படம் 2024 ஜூன் 14ல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது.




மகாராஜா திரைப்படத்தின் கதை

கதைக்கரு: நாயகன் விஜய் சேதுபதி தான் நடத்திவரும் சலூன் கடையில் உள்ள தனது லட்சுமி-யை காணவில்லை என போலீஸாரிடம் வழக்கு கொடுக்கிறார். போலீஸ் அதனை விசாரிக்க லஞ்சம் கொடுத்து அவசரப்படுத்துகிறார். விஜய் சேதுபதியின் வழக்கை விசாரித்த போலீஸ் பெரிய அளவில் பல குற்றங்களும் பல திடுக்கிடும் விஷயங்களை கண்டு பிடிக்கின்றனர். விஜய் சேதுபதியின் கடையில் இருந்த லட்சுமி என்ன? சலூன் பெட்டியா, ஏதேனும் பொருளா, உயிர் உள்ள நபரா?  என்பதே இப்படத்தின் கதைக்கரு.

கதை

விஜய் சேதுபதி கே.கே நகர் பகுதியில் ஒரு சலூன் கடை நடத்தி வருகிறார். இவர் பள்ளிக்கரணை பகுதியில் தன் மகளுடன் வசித்து வருகிறார். ஒரு நாள் தனது வீட்டில் இருந்த லட்சுமி-யை காணவில்லை என போலீஸ் ஸ்டேஷன்-க்கு புகார் அளிக்க வரும், விஜய் சேதுபதி பல அவமானங்களை சந்தித்து போலிஸிடம் சில லட்சம் லஞ்சம் தருவதாக டீல் செய்து தனது வீட்டில் காணாமல் போன லட்சுமியை கண்டுபிடிக்க சொல்கிறார். விஜய் சேதுபதியின் டீலுக்காக போலீஸ் அதிகாரி நடராஜன் தனது தேடலை தொடங்குகிறார்.

கதைக்களம் நகர பல விஷயங்கள் வெளிவருகிறது. 15 வருடத்திற்கு முன் அனுராக் காஷ்யப் எலக்ட்ரிகல் தொழில் செய்து வருகிறார். பகல் நேரத்தில் எலக்ட்ரிகல், இரவு நேரத்தில் திருட்டு என செய்து வருகிறார் அனுராக் காஷ்யப். தான் கொள்ளையடிக்க செல்லும் இடங்களில் உள்ள பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வருகிறார், அனுராக் காஷ்யப். ஒரு நாள் போலீஸிடம் சிக்கும் அனுராக் காஷ்யப், இதற்கு காரணம் விஜய் சேதுபதி தான், என தவறாக புரிந்து கொள்கிறார். 15 வருடம் ஜெயில் தண்டனைக்கு பிறகு வெளிவரும் அனுராக் காஷ்யப், விஜய் சேதுபதியை தேடி கண்டுபிடித்து அவரை பழிவாங்க துடிக்கிறார். 

விஜய் சேதுபதியின் மனைவி திவ்யா பாரதி ஒரு விபத்தில் சிக்கி உயிரிழக்க, அப்போது அவரது மகளை குப்பை தொட்டியில் போட்டு செல்கின்றனர். விஜய் சேதுபதி தன் மகளுடன் அந்த குப்பை தொட்டியையும் எடுத்து வருகிறார். அந்த குப்பை தொட்டியின் பெயர் தான் லட்சுமி. 

ஜெயிலில் இருந்த வெளிவந்த அனுராக் காஷ்யப், விஜய் சேதுபதியின் மகளை பாலியல் பலாத்காரம் செய்து விடுகிறார். பின்னர் விஜய் சேதுபதி குப்பை தொட்டி காணவில்லை என புகார் அளித்து, போலீஸ் கவனத்தை ஈர்த்து, அனுராக் காஷ்யப் கண்டுபிடிக்கிறார். பின் என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் ட்விஸ்ட்...
 
மகாராஜா திரைப்படத்தின் பிரத்யேக தகவல்கள்

மகாராஜா திரைப்படம் 'மக்கள் செல்வன்' திரைப்பயணத்தில் இவர் நடித்துள்ள 50வது திரைப்படமாகும். இப்படத்தினை 'குரங்கு பொம்மை' திரைப்படத்தினை இயக்கி மக்களின் மனதை வென்ற நித்திலன் சுவாமிநாதன் இயக்கியுள்ளார். குரங்கு பொம்மை படத்திற்கு பின் 7 வருடங்களுக்கு பிறகு நித்திலன் இப்படத்தின் மூலம் தனது இரண்டாவது படைப்பை படைத்துள்ளார்.

இப்படம் ஒரு கமெர்சியல் படமாக இல்லாமல், கதைக்களம் முக்கியத்துவம் பொருந்திய படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு கலைஞர்களும் தங்களின் முழு திறனை கொடுத்து நடித்து அசத்தியுள்ளனர்.

2023 ஆம் ஆண்டு பிப் மாத தொடக்கத்தில் இப்படத்தின் இயக்குனர் விஜய் சேதுபதியின் 50வது படத்தினை இயக்க போவதாக அறிவிப்பை வெளியிட்ட நிலையில், பின்னர் ஜூலை 12, 2023ல் இப்படத்தினை தலைப்பை அறிவித்துள்ளனர், படக்குழுவினர். இப்படத்தினை இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் - விஜய் சேதுபதியின் சேதுபதி படத்திற்கு இசையமைத்துள்ளார், மேலும் இப்படத்தின் இயக்குனர் இயக்கிய குரங்கு பொம்மை படத்திலும் இசையமைப்பாளராக பணியாற்றி உள்ளார்.
 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+