மனிதன் கதை

  மனிதன் இயக்குனர் அஹ்மத் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஹன்ஷிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், ராதா ரவி மற்றும் விவேக் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நகைச்சுவை காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கின்றார்.

  மனிதன் கதை : 

  உதயநிதி ஊரில் வக்கீலுக்கு படித்துவிட்டு வெட்டியாக சுற்றும் இளைஞன். தன் ஊரிலே தன்னை சுற்றி இருப்பவர்கள், குடும்பத்தினர் அனைவரின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகும் அப்பாவியாக வலம்வருகிறார். இடையில், தன் மாமாவின் மகள், தன்னுடைய முறை பொண்ணான ஹன்ஷிகாவுடன் காதல் என ஜாலியாக வரும் உதயநிதிக்கு தான் ஒரு திறைமையான வக்கீல் என நிருபித்தால் மட்டுமே ஹன்ஷிகாவை திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற நிலையில், ஊரை விட்டு சென்னைக்கு வருகின்றார். 

  சென்னையில், பல்வேறு அவமானங்கள், கஷ்டங்கள், சங்கடங்கள் என பல இன்னல்களுக்கு உட்பட்டு வருகிறார். விவேக்கை நம்பி சென்னைக்கு வரும் உதயநிதிக்கு வந்த இடத்தில், பெரிய அதிர்ச்சி விவேக் ஊறுகாய் கடை போட்டு பிழைத்து வருவருவது. அந்த நேரத்தில், இவர் ஒரு வக்கீலாக நீதிமன்றத்தில் வலம் வருவதுடன் பல அவமானங்களையும் சந்திக்கிறார்.

  ஒரு கட்டத்தில், நடைபாதையில் படுத்திருந்த ஏழைகளை ஒரு பெரிய இடத்து பையன் காரினை ஏற்றி கொன்றுவிடுகிறார். அவருக்கு ஆதரவாக இந்தியாவின் மிகப்பெரிய வக்கீலான பறாக்ஸ் ராஜ் ஆஜராகிறார். அவருக்கு எதிராக அந்த பையனை எதிராக உதயநிதி ஆஜராகிறார். 

  இதனால் பல துன்பங்கள், தடங்கல்களை சந்திக்கும் உதயநிதி தன் யார் என்பதயும், தன்னுடைய திறமையையும் நிருப்பிக்க இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று களத்தில் முழுமனதுடன் இறங்குகிறார். இவருக்கு ஏற்ப்படும் பல தடைகளை மீறியும் இவர் தனது வழக்கில் வெற்றி பெற்றாரா ? என்பதே மீதிக்கதை. 
  **Note:Hey! Would you like to share the story of the movie மனிதன் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).