X
மனிதன்

மனிதன்

Comedy | 29 Apr 2016 |
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

மனிதன் கதை

மனிதன் இயக்குனர் அஹ்மத் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஹன்ஷிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், ராதா ரவி மற்றும் விவேக் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நகைச்சுவை காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கின்றார். மனிதன் கதை :  உதயநிதி ஊரில் வக்கீலுக்கு படித்துவிட்டு வெட்டியாக சுற்றும் இளைஞன். தன் ஊரிலே தன்னை சுற்றி இருப்பவர்கள், குடும்பத்தினர் அனைவரின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகும் அப்பாவியாக வலம்வருகிறார். இடையில், தன் மாமாவின் மகள், தன்னுடைய முறை பொண்ணான ஹன்ஷிகாவுடன் காதல் என ஜாலியாக வரும் உதயநிதிக்கு தான் ஒரு திறைமையான வக்கீல் என நிருபித்தால் மட்டுமே ஹன்ஷிகாவை திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற நிலையில், ஊரை விட்டு சென்னைக்கு வருகின்றார்.  சென்னையில், பல்வேறு அவமானங்கள், கஷ்டங்கள், சங்கடங்கள் என பல இன்னல்களுக்கு உட்பட்டு வருகிறார். விவேக்கை நம்பி சென்னைக்கு வரும் உதயநிதிக்கு வந்த இடத்தில், பெரிய அதிர்ச்சி விவேக் ஊறுகாய் கடை போட்டு பிழைத்து வருவருவது. அந்த நேரத்தில், இவர் ஒரு வக்கீலாக நீதிமன்றத்தில் வலம் வருவதுடன் பல அவமானங்களையும் சந்திக்கிறார். ஒரு கட்டத்தில், நடைபாதையில் படுத்திருந்த ஏழைகளை ஒரு பெரிய இடத்து பையன் காரினை ஏற்றி கொன்றுவிடுகிறார். அவருக்கு ஆதரவாக இந்தியாவின் மிகப்பெரிய வக்கீலான பறாக்ஸ் ராஜ் ஆஜராகிறார். அவருக்கு எதிராக அந்த பையனை எதிராக உதயநிதி ஆஜராகிறார்.  இதனால் பல துன்பங்கள், தடங்கல்களை சந்திக்கும் உதயநிதி தன் யார் என்பதயும், தன்னுடைய திறமையையும் நிருப்பிக்க இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று களத்தில் முழுமனதுடன் இறங்குகிறார். இவருக்கு ஏற்ப்படும் பல தடைகளை மீறியும் இவர் தனது வழக்கில் வெற்றி பெற்றாரா ? என்பதே மீதிக்கதை. 
Read More

மனிதன் நடிகர்கள் & படக்குழுவினர்

மனிதன் அணியின் தகவல்

இயக்குனர் ஐ அஹ்மத்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை சந்தோஷ் நாராயணன்
தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

மனிதன் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
ஜாலி எல்எல்பி என்ற இந்திப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இந்த மனிதன். முகவரியற்ற நடைபாதைவாசிகளுக்கான சமர்ப்பணம் என்று முடியும் இந்தப் படம் உண்மையாகவே அப்படி ஒரு உணர்வைத் தருகிறதா... வாழ்த்துகள் உதயநிதி. முதல் முறையாக மிகவும் சின்சியரான ஒரு கேரக்டரில் இயல்பாக நடித்ததற்காக! ஒருபக்கம் ஜாம்பவான் ராதாரவி, மறுபக்கம் அட்டாக் ஆதிசேஷனாக நிற்கும் பிரகாஷ்ராஜ்.. இருவருக்கும் இடையில் நின்று தன்னாலும் கச்சிதமான நடிப்பைத் தர முடியும் என்று காட்டியிருக்கிறார். பார்ப்பவர் மனசுக்கு ரொம்ப நெருக்கமான காதல் காட்சிகள். நீதி மன்றக் காட்சிகளில் ராதாரவி, பிரகாஷ்ராஜுக்கு இணையாக ஸ்கோர் செய்கிறார் உதயநிதி. ஹன்சிகாவுக்கு டீச்சர் வேடம். வெறும் அழகுப் பொம்மையாக வந்து போகாமல் காதலனுக்கு பொறுப்பையும் சொல்லிக் கொடுக்கும் பாத்திரம். இந்த மாதிரி வேடத்தில் அவரைப் பார்ப்பது நிஜமாகவே ஒரு மாறுதல்தான். பிரகாஷ் ராஜ் சத்தம் கொஞ்சம் ஓவர்தான். ஆனால் ஷார்ப்பான ப்ளேடு மாதிரி கச்சிதமான பர்ஃபார்மென்ஸ்! க்ளைமாக்ஸில் சாட்சியாய் வந்து நம்மை கலங்க வைக்கும் அந்த வந்தவாசி நபரின் நடிப்பு, போலீசின் கவனத்தை மாற்றும் டீக்கடைக்காரர், உதயநிதிக்கு நோஞ்சான் பாதுகாவலராக வந்து, சட்டென்று ஒரு திருப்பம் தரும் அந்த காவலர்... அருமை! கச்சிதமாக இந்தத் திரைக்கதைக்கு எந்த வகையிலும் உதவவில்லை சந்தோஷ் நாராயணனின் இசையும் பாடல்களும். ஆனால் மதியின் ஒளிப்பதிவு காட்சிகளை மனசுக்கு நெருக்கமாக்கிவிடுகிறது. இந்த மாதிரி ப்ளாட்பாரத்தில் படுத்திருந்த ஏழைகளை காரேற்றிக் கொன்ற கோடீஸ்வர சென்னைவாசி கதையே நிஜத்தில் இருக்கிறதே... அதைவிட்டு அகமது ஏன் பாலிவுட் ரீமேக்கை நாடினார்? எல்லாம் ஒரு பாதுகாப்புணர்வு... நல்லது! இந்த மனிதனை அவசியம் பாருங்கள்!

மனிதன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

மனிதன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+