»   »  முதலில் குடும்பத்திற்கு நல்ல தலைவனாகவும் பின்னர் ரசிகனாகவும் இரு - விவேக்

முதலில் குடும்பத்திற்கு நல்ல தலைவனாகவும் பின்னர் ரசிகனாகவும் இரு - விவேக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ''முதலில் குடும்பத்திற்கு நல்ல தலைவனாகவும் பின்னர் ரசிகனாகவும் இரு'' என இளைஞர்களுக்கு நடிகர் விவேக் அறிவுரை கூறியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம்வருபவர் விவேக். காமெடி மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களிலும் விவேக் கலக்கி வருகிறார்.

You are the Hero for Your Family says Vivek

சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மனிதன் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முதலில் குடும்பத்திற்கு நல்ல தலைவனாகவும் பின்னர் ரசிகனாகவும் என, விவேக் தற்போதைய இளைஞர்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் ''நடிகருக்கு ரசிகனாக இரு. ஆனால் முதலில் பெற்றோருக்கு நல்ல மகனாக குடும்பத்துக்கு நல்ல தலைவனாக இருக்க கற்று கொள். ஏனெனில் நீதான் உனது குடும்பத்திற்கு உண்மையான ஹீரோ'' என்று கூறியிருக்கிறார்.

சமூக வலைதளங்களில் தங்கள் அபிமான நடிகருக்காக இளைஞர்கள் தினசரி சண்டையிட்டுக் கொள்கின்றனர்.இதனைக் கருத்தில் கொண்டுதான் விவேக் இப்படிக் கூறியிருப்பதாக கருதப்படுகிறது.

English summary
Actor Vivek Advice to Youngsters ''You are the Hero for Your Family''.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil