Don't Miss!
- News
ஸ்டாலின் தேசியத் தலைவர் ஆகிவிட்டார்! டெல்லிக்கு போனதே 2 முறை தான்! துரைமுருகன் 'பளிச்'!
- Sports
அடிதூள்.. ஐபிஎல் 2023 தேதிகள் இதுதான்.. ரசிகர்கள் எதிர்பார்க்காத மெகா மாற்றமும் உண்டு.. முழு விவரம்
- Finance
IBM அறிவிப்பால் ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி.. 3900 பேர் பணிநீக்கம்.. காரணம் என்ன தெரியுமா..?
- Automobiles
"தாலாட்டும் காற்றே வா..." நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?
- Lifestyle
பெண்கள் வயாகரா எடுத்துக்கொள்ளலாமா? எடுத்துக் கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
- Technology
மண்டை மேல் இருக்குற கொண்டைய மறந்த Infinix! ரூ.9,999க்கு புது போன் அறிமுகம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
ராகவேந்திரரை ரஜினி கும்பிட மாட்டார்.. ராதா ரவி ஓப்பன் டாக்.. அந்த ’பாம்’ சட்டையையும் கலாய்!
சென்னை: ரஜினிகாந்த்தின் பிறந்தநாளான இன்று ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ரஜினி உடன் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் ராதா ரவி மனிதன் படத்தை அவரிடமே விமர்சித்தது குறித்தும் அவர் தான் ராகவேந்திரரை அறிமுகப்படுத்தினார் என்றும் தற்போது பேசியிருப்பது டிரெண்டாகி வருகிறது.
சூப்பர் சிங்கர் புகழ் பாடகி ராஜலட்சுமி நடிப்பில் உருவாகி வரும் லைசன்ஸ் படத்தின் ஃபார்ஸ்ட் லுக் ரிலீஸ் நிகழ்ச்சியில் தான் ராதா ரவி ரஜினி குறித்து இப்படி பேசி உள்ளார்.
மெட்ரோவில் தொடங்கிய வாரிசு ப்ரோமோஷன்... அடுத்து கபாலி ரஜினி ரூட்டில் விஜய்யின் அதிரடி பிளான்

டிரெண்டிங் தெரிந்தவர்
பேச்சுத் திறமையில் நடிகர் ராதா ரவியை யாரும் அடித்துக் கொள்ள முடியாது. அந்தளவுக்கு பேசுபவர். அதே போல யூடியூப் டிரெண்டிங்கை நன்கு அறிந்து வைத்திருக்கக் கூடிய அவர் என்ன பேசினால், இன்னைக்கு யாரை பற்றி பேசினால் நம்மை பற்றி பேசுவார்கள் என்பதை அறிந்தே ரஜினியின் பிறந்தநாளில் சூப்பர்ஸ்டாரின் டாப்பிக்கை தொட்டுப் பேசி உள்ளார்.

ராஜலட்சுமி பட ஃபர்ஸ்ட் லுக்
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான செந்தில் மற்றும் ராஜலட்சுமி தம்பதியினர் சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்துள்ளனர். செந்தில் ஹீரோவாக நடித்து ஒரு படம் வெளியான நிலையில், அடுத்து ராஜலட்சுமி நாயகியாக நடிக்கும் 'லைசன்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

ராதா ரவி பேச்சு
அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ராதா ரவி ராஜ லட்சுமிக்கு பல ஃப்ரீ அட்வைஸ்களை அள்ளித் தெளித்தார். ஷூட்டிங் ஸ்பாட்டில் தனி பாத்ரூம் கேட்டு வாங்கிக்கோம்மா என்றும் கூறினார். பின்னர், ரஜினிகாந்தை பற்றி அவர் பேசியது தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

நாயகன் படத்தை பாராட்டினேன்
கோயமுத்தூர்ல ரஜினி சாரை மீட் பண்ணும் போது நேத்து ஒரு படம் பார்த்தேன் சார்.. நாயகன்னு அழுதுட்டேன் சார்.. வீட்டுக்கு வந்து திரும்ப திரும்ப போட்டுப் பார்த்தேன் சார்னு சொன்னேன்.. ரஜினி அவர் ஸ்டைலில் அப்படியான்னு கேட்டார்.. அதன் பிறகு அவரிடம் இப்ப ஒரு படம் பார்த்தேன் சார்.. கொன்னுடலாம்னு தோணுச்சு சார் என்றேன்..

சட்டையில் வெடிகுண்டு
என்ன படம்னு கேட்டார்.. மனிதன்னு சொன்னேன்.. யோவ்.. அது நான் நடிச்ச படம் என்றார். அதனால தான் சார் சொல்றேன். நீங்க இப்படியெல்லாம் செய்யக் கூடாதுன்னு சொன்னேன். சண்டைக் காட்சியில் சட்டை முழுவதும் வெடிகுண்டு மாட்டி வச்சிட்டு பறந்து பறந்து சண்டை போடுவார்.. அப்படியெல்லாம் பண்ண முடியாது சார், கீழே விழுந்தா குண்டு வெடிச்சிடும்னு சொன்னேன். அதையும் நீங்க இப்படி பண்ணா ஆளாளுக்கு குண்டு மாட்டிக்கிட்டு கிளம்பிடுவாங்க அப்புறம் வெடிகுண்டு கலாசாரத்தை ஆரம்பிச்சி வச்ச மாதிரி ஆகிடும்னு சொன்னேன் என்றார்.

ராகவேந்திராவை கும்பிடமாட்டார்
முன்பு ஒருமுறை இப்படித்தான் ராகவேந்திரா படம் வரும் போது, ஊர்ல ஏற்கனவே ஏகப்பட்ட பிள்ளையார் கோயில் இருக்கு.. நீங்க வேற புதுசா ராகவேந்திரரை அறிமுகம் பண்ணி வைக்கிறீங்களேன்னு சொன்னேன். இப்போ நானே ராகவேந்திரரைத் தான் கும்பிட்டுட்டு இருக்கேன் என்றார். மேலும், ஆனால், ரஜினி ராகவேந்திரரை எல்லாம் கும்பிட மாட்டார்.. அவர் இப்போ அதை விட ஸ்லோகம், மந்திரம்னு போயிட்டார் என பேச அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.