»   »  'உதயநிதி தமிழ்னு பேரு வைச்சாலும் வரிவிலக்கு கிடையாதா?' கிண்டலடிக்கும் நெட்டிசென்கள்

'உதயநிதி தமிழ்னு பேரு வைச்சாலும் வரிவிலக்கு கிடையாதா?' கிண்டலடிக்கும் நெட்டிசென்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத் தேர்தலில் மீண்டும் அதிமுக கட்சி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

நெட்டிசென்கள் இதனை வைத்து இணையத்தில் மீம்ஸ்களை தெறிக்க விட்டுக் கொண்டிருக்கின்றனர். தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து மற்ற கட்சிகளை கிண்டலடித்தவர்களின் பார்வை தற்போது உதயநிதி பக்கம் திரும்பியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் உதயநிதியின் எந்தப் படங்களுக்கும் தமிழக அரசு வரிவிலக்கு கொடுக்கவில்லை. சமீபத்தில் வெளியான மனிதன் படத்துக்கு கூட வரிவிலக்கு அளிக்கப்படவில்லை.

இதற்கு மனிதன் என்பது தமிழ் வார்த்தை அல்ல என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடிக்கும் என அனைவரும் எண்ணிக் கொண்டிருக்க மாறாக அதிமுக 2 வது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது.

இது திமுகவினருக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. அதே நேரம் உதயநிதி ஸ்டாலினுக்கும் அதிமுக ஆட்சி அதிர்ச்சியை அளிக்கத் தவறவில்லை.

இந்நிலையில் நெட்டிசென்கள் இனிமேல் நீங்கள் தமிழ் என்று பெயர் வைத்தால் கூட வரிவிலக்கு கிடைக்காது, என உதயநிதியைக் கிண்டலடித்துள்ளனர்.

English summary
Udhayanidhi Stalin Movies no Tax exemption for Next 5 years.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil