மன்மத லீலை கதை

  மன்மத லீலை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்ம்ருதி வெங்கட், ரியா சுமன், ஜெய பிரகாஷ் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் முருகானந்தம் தயாரிக்க, இசையமைப்பாளர் பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்.

  இளைஞர்கள் கொண்டாடும் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் வெங்கட் ராஜன் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் மணிவண்ணன் பாலசுப்ரமணியம் இணைந்து எழுதியுள்ளனர்.  மன்மத லீலை திரைப்படம் 2022 ஏப்ரல் 1ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

  மன்மத லீலை படத்தின் படக்குழு / திரைநட்சத்திரங்கள்

  மன்மத லீலை வீடியோக்கள்

  மன்மத லீலை படத்தின் கதை

  2010ல் முகநூல் மூலம் அஷோக் செல்வன் - சம்யுக்தா ஹெக்டே அறிமுகமாகின்றனர். முகநூலில் பழகி வரும் இவர்கள், தனது வீட்டில் யாரும் இல்லை என்று அசோக் செல்வன்-யை தன் வீட்டிற்கு அழைக்கிறார், சம்யுக்தா ஹெக்டே.

  சம்யுக்தாவின் வீட்டிற்கு வரும் அஷோக் செல்வன் எல்லையை மீறி, இருவரும் படுக்கை வரை செல்கின்றனர், மறு நாள் காலை சம்யுக்தாவின் தந்தை ஜெயபிரகாஷ் எதிர்பாராமல் வருகை தருகிறார். அஷோக் செல்வன் ஜெயபிரகாஷ்-யிடம் வசமாக மாட்டி கொள்கிறார்.

  பத்து ஆண்டுகள் கழித்து 2020ல் அஷோக் செல்வன், ஸ்ம்ருதி வெங்கட் உடன் திருமணமாகி 1 பெண் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் ஸ்ம்ருதி வெங்கட் குழந்தையுடன் வெளியே சென்றதும் நடிகை ரியா சுமன் வருகை தருகிறார்.

  இருவரும் பழகி எல்லையை மீறுகின்றனர். பின்னர் ஸ்ம்ருதி வெங்கட் வீட்டிற்கு வந்ததும் சாமர்த்தியமாக ரியா சுமனை வெளியேற்றுகிறார், அஷோக் செல்வன். பின் ரியா சுமன், அஷோக் - ரியா பழகிய வீடியோ ஒன்றை காட்டி பணம் பறிக்க முயற்சிக்கிறார்.

  பின் என்ன ஆனது? 2010, 2020 என இரு கதையிலும் அஷோக் செல்வன் எப்படி தப்பித்தார் என்பதே படத்தின் கதை.
  **Note:Hey! Would you like to share the story of the movie மன்மத லீலை with us? Please send it to us (popcorn@oneindia.co.in).