X
தமிழ் » திரைப்படங்கள் » மன்மத லீலை
மன்மத லீலை

மன்மத லீலை

Adult | Comedy | Drama | 01 Apr 2022 | A | 111 Mins
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

மன்மத லீலை கதை

மன்மத லீலை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்ம்ருதி வெங்கட், ரியா சுமன், ஜெய பிரகாஷ் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் முருகானந்தம் தயாரிக்க, இசையமைப்பாளர் பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். இளைஞர்கள் கொண்டாடும் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் வெங்கட் ராஜன் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் மணிவண்ணன் பாலசுப்ரமணியம் இணைந்து எழுதியுள்ளனர்.  மன்மத லீலை திரைப்படம் 2022 ஏப்ரல் 1ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மன்மத லீலை படத்தின் படக்குழு / திரைநட்சத்திரங்கள் மன்மத லீலை வீடியோக்கள் மன்மத லீலை படத்தின் கதை 2010ல் முகநூல் மூலம் அஷோக் செல்வன் - சம்யுக்தா ஹெக்டே அறிமுகமாகின்றனர். முகநூலில் பழகி வரும் இவர்கள், தனது வீட்டில் யாரும் இல்லை என்று அசோக் செல்வன்-யை தன் வீட்டிற்கு அழைக்கிறார், சம்யுக்தா ஹெக்டே. சம்யுக்தாவின் வீட்டிற்கு வரும் அஷோக் செல்வன் எல்லையை மீறி, இருவரும் படுக்கை வரை செல்கின்றனர், மறு நாள் காலை சம்யுக்தாவின் தந்தை ஜெயபிரகாஷ் எதிர்பாராமல் வருகை தருகிறார். அஷோக் செல்வன் ஜெயபிரகாஷ்-யிடம் வசமாக மாட்டி கொள்கிறார். பத்து ஆண்டுகள் கழித்து 2020ல் அஷோக் செல்வன், ஸ்ம்ருதி வெங்கட் உடன் திருமணமாகி 1 பெண் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் ஸ்ம்ருதி வெங்கட் குழந்தையுடன் வெளியே சென்றதும் நடிகை ரியா சுமன் வருகை தருகிறார். இருவரும் பழகி எல்லையை மீறுகின்றனர். பின்னர் ஸ்ம்ருதி வெங்கட் வீட்டிற்கு வந்ததும் சாமர்த்தியமாக ரியா சுமனை வெளியேற்றுகிறார், அஷோக் செல்வன். பின் ரியா சுமன், அஷோக் - ரியா பழகிய வீடியோ ஒன்றை காட்டி பணம் பறிக்க முயற்சிக்கிறார். பின் என்ன ஆனது? 2010, 2020 என இரு கதையிலும் அஷோக் செல்வன் எப்படி தப்பித்தார் என்பதே படத்தின் கதை.
Read More

மன்மத லீலை நடிகர்கள் & படக்குழுவினர்

மன்மத லீலை அணியின் தகவல்

இயக்குனர் வெங்கட் பிரபு
கதை வெங்கட் பிரபு
சங்கதி மணிவண்ணன் பாலசுப்ரமணியம், வெங்கட் பிரபு
ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்
தொகுப்பாளர் வெங்கட் ராஜன்
இசை பிரேம்ஜி அமரன்
தயாரிப்பாளர் முருகானந்தம்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

மன்மத லீலை விமர்சகர்களின் விமர்சனம்

Indiaglitz
வி.பி.யின் புதிய முயற்சியில் வந்திருக்கும் திருப்பங்கள் நிறைந்த மன்மத லீலைக்கு தாராளமாக உங்கள் ஆதரவை தரலாம்.
மாலை மலர்
மொத்தத்தில் ‘மன்மத லீலை’ ரசிக்கலாம்.
தினமலர் - சினிமா
மன்மத லீலை - லீலைகள்...
பில்மிபீட்
அமெரிக்கன் பை, ஹாங் ஓவர் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களின் பாதிப்பில் தான் இயக்குநர் வெங்கட் பிரபு தொடர்ந்து ஜாலியான படங்களை இயக்கி வருகிறார்.

மன்மத லீலை ட்ரெய்லர்

Video Thumbnail

மன்மத லீலை திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

மன்மத லீலை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+