For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  என்ன தம்பி இதெல்லாம்.. வெங்கட் பிரபுவின் ’மன்மத லீலை’யை வெளிச்சம் போட்டு காட்டிய பிரேம்ஜி!

  |

  சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் உருவான மன்மத லீலை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி சக்கைப் போடு போட்டு வருகிறது.

  இந்நிலையில், அண்ணன் வெங்கட் பிரபுவை பகிரங்கமாக ட்விட்டரில் வம்பிழுத்துள்ளார் இசை டக்கீலா பிரேம்ஜி.

  பீஸ்ட்டை தொடர்ந்து விக்ரம் படத்தையும் கைப்பற்றிய ரெட் ஜெயண்ட் மூவிஸ்..6 மணிக்கு வந்த அப்டேட் இதுதான்பீஸ்ட்டை தொடர்ந்து விக்ரம் படத்தையும் கைப்பற்றிய ரெட் ஜெயண்ட் மூவிஸ்..6 மணிக்கு வந்த அப்டேட் இதுதான்

  அவர் போட்ட ட்வீட்டை பார்த்து தலையில் அடித்துக் கொள்ளும் எமோஜியை வெங்கட் பிரபு போட்டிருப்பது வேறலெவல் ரகளை.

  பிளாக்பஸ்டர் மாநாடு

  பிளாக்பஸ்டர் மாநாடு

  கடந்த ஆண்டு வெளியான சிம்புவின் மாநாடு திரைப்படம் இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் சிம்புவுக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது. அதிக பொருட்செலவு எல்லாம் செய்யாமல் தெளிவான திரைக்கதை மற்றும் குழப்பமில்லாத எடிட்டிங்கால் ஹாலிவுட் தரத்திற்கு தமிழில் ஒரு டைம் லூப் படத்தை கொடுத்திருந்தார் வெங்கட் பிரபு.

  அடுத்த படத்தின் மீது எதிர்பார்ப்பு

  அடுத்த படத்தின் மீது எதிர்பார்ப்பு

  இயக்குநர் வெங்கட் பிரபுவின் மாநாடு படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில், அடுத்ததாக விஜய், அஜித்தை வைத்து மங்காத்தா 2 படத்தை இயக்குவாரா? என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்க செம சிம்பிளாக அசோக் செல்வனை வைத்து ஒரு குயிக்கியை கொடுத்திருக்கிறார் வெங்கட் பிரபு.

  இப்படியொரு டைட்டிலா

  இப்படியொரு டைட்டிலா

  எம்.கே. தியாகாராஜ பாகவதர் நடிப்பில் வெளியான ஹரிதாஸ் படத்தில் இடம்பெற்ற மன்மத லீலையை வென்றார் உண்டோ பாடல் வரிகளில் இருந்த மன்மத லீலை எனும் வார்த்தையை டைட்டில் ஆக்கி கமல்ஹாசன் 1976ம் ஆண்டு இயக்குநர் பாலசந்தர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்திருந்தார். அதே டைட்டிலுடன் தற்போது மன்மத லீலை லேட்டஸ்ட் வெர்ஷனை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கி உள்ளார்.

  லேட்டா வந்தாலும்

  லேட்டா வந்தாலும்

  படம் திட்டமிட்டபடி காலையிலேயே வெளியாகவில்லை என்றாலும், மதியம் படம் ரிலீஸ் ஆனதும் பயங்கர பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. அடல்ட் பிளஸ் காமெடி படமாக இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அடல்ட் பிளஸ் கிரைம் படமாக இந்த படம் அமைந்திருப்பது இயக்குநர் வெங்கட் பிரபுவின் வெற்றியைத் தான் குறிக்கிறது.

  என்ன தம்பி இதெல்லாம்

  என்ன தம்பி இதெல்லாம்

  எப்போதுமே சமூக வலைதளங்களில் நடிகைகள் ஒரு போட்டோ போட்டால் கீழ் முதல் கமெண்ட்டாக கண்ணாடியை தூக்கி பார்க்கும் ஹாலிவுட் படத்தின் ஜிஃப் இமேஜை போட்டு ஜொள்ளு விட்டு வரும் இசை டக்கீலா பிரேம்ஜி, அண்ணன் வெங்கட் பிரபுவின் மன்மத லீலையை ட்விட்டரில் வெளிச்சம் போட்டுக் காட்டி வெறுப்பேற்றி உள்ளார்.

  இது வெங்கட் பிரபுவின் மன்மத லீலை

  இது வெங்கட் பிரபுவின் மன்மத லீலை

  இயக்குநராக ஆவதற்கு முன்னர் பல படங்களில் ஹீரோவாகவும் நண்பராகவும் நடித்துள்ளார் வெங்கட் பிரபு. அப்படி அவர் நடிகையுடன் படு நெருக்கமாக இருக்கும் போட்டோவை எடுத்து போட்டு மன்மத லீலை டைட்டிலை எடிட் செய்து, "என்ன தம்பி வெங்கட் பிரபு" இதெல்லாம் என பிரேம்ஜி பங்கமாக கலாய்த்துள்ளார்.

  கண்ணை மூடிக் கொண்டு

  கண்ணை மூடிக் கொண்டு

  பிரேம்ஜி இப்படியொரு போஸ்ட்டை போட அதை பார்த்து வெட்கப்பட்ட வெங்கட் பிரபு ஷப்பா முடியல என கண்ணை மூடிக் கொள்ளும் மற்றொரு ஹாலிவுட் ஜிஃப் மீமை போட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். இடையே வாசுகி பாஸ்கர், சாந்தனு உள்ளிட்ட பிரபலங்களும் வெங்கட் பிரபுவை கலாய்த்து வருகின்றனர்.

  பார்ட்டி எப்போ

  பார்ட்டி எப்போ

  மாநாடு, மன்மத லீலை என வெங்கட் பிரபு மாஸ் காட்டி வரும் நிலையில், ரசிகர்கள் அந்த பார்ட்டி படத்தையும் அப்படியே ரிலீஸ் பண்ணீங்கனா புண்ணியமா போகும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். ரிலீஸ் சிக்கலில் சிக்கித் தவிக்கும் அந்த படமும் அனைத்து பிரச்சனைகளும் சுமூக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு செய்யப்பட்டு வெளியானால் வெங்கட் பிரபுவின் பார்ட்டியை ரசிகர்கள் என்ஜாய் செய்வாங்க.. ஆனால், மாநாடு படத்தை பீட் செய்யும் அளவுக்கு பெரிய நடிகரோடு ஒரு படத்தை வெங்கட் பிரபு கொடுக்க வேண்டும் என்பது தான் அனைத்து வெங்கட் பிரபு ஆர்மியினரின் எதிர்பார்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

  English summary
  Premgi shares Venkat Prabhu’s version of Manmadha Leelai photo meme and teases his own brother in Social Media. Santhanu and Vasuki Bhasker reacts heavily for Premgi’s high level troll.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X