Don't Miss!
- Education
Micro Job Fair in Namakkal 2023: நாமக்கலில் நாளை வேலைவாய்ப்பு முகாம்...!
- Lifestyle
1 வாரம் நீங்கள் சர்க்கரை எடுத்துக்கொள்வதை நிறுத்தினால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா?
- News
ஏழை எளிய எழுத்தாளனுக்கு சர்வதேச அங்கீகாரம்! - ஸ்டாலின் முதல் முயற்சியே மாபெரும் வெற்றி
- Finance
அம்பானி, அதானிய விடுங்க.. டாடா குழுமத்தின் திட்டத்தை பாருங்க.. 5 ஆண்டுகளில் தரமான சம்பவம் இருக்கு?
- Automobiles
மாஸ் காட்டிய கொங்கு நாட்டு மக்கள்! தமிழ் நாடே இப்ப இவங்கள தான் வாய பொளந்து பாத்துட்டு இருக்குது!
- Travel
பாண்டிச்சேரியில் தொடங்கப்படும் பாராகிளைடிங் – இனி பாராசூட்டில் பயணிக்க வெளி மாநிலங்களுக்கு செல்ல தேவை இல்லை!
- Sports
"என் நிம்மதியே போச்சு; தூங்கவே விடல" இரட்டை சதத்திற்கு முன் இஷான் செய்த சேட்டை.. கில் சுவாரஸ்ய தகவல்
- Technology
கண்ணீர் சிந்தும் சியோமி போன் பயனர்கள்: அவசரப்பட்டு புது 5ஜி போன் வாங்காதீங்க!
5 படம் ஃபிளாப்.. ப்ளூ சட்டை மாறன் ட்வீட்.. குரைக்கிற நாய் குரைக்கட்டும் என சீறிய அசோக் செல்வன்!
சென்னை: சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறனுக்கும் சினிமா பிரபலங்களுக்கும் இந்த ஆண்டு ஏகப்பட்ட நேரடி மோதல்கள் நடைபெற்றன.
பார்த்திபன், ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்ட சில பிரபலங்கள் ப்ளூ சட்டை மாறனின் ட்ரோலுக்கு எதிர்வினை ஆற்றி இருந்தனர்.
இந்த வரிசையில் இந்த ஆண்டு கடைசி ஆளாக நடிகர் அசோக் செல்வன் வசமாக சிக்கி உள்ளார். அசோக் செல்வன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான படங்கள் எல்லாமே ஃபிளாப் என ப்ளூ சட்டை மாறன் போட்ட ட்வீட் அசோக் செல்வனை நல்லாவே ட்ரிக்கர் பண்ணி உள்ளது.
மீண்டும்
பிரியாணி..
துணிவை
வென்றே
ஆக
வேண்டிய
பதட்டத்தில்
இருக்கிறாரா
விஜய்?
ப்ளூ
சட்டை
மாறன்
கேள்வி!

செலக்டிவ் ஸ்க்ரிப்ட்
மற்ற
இளம்
நடிகர்களை
போல
மாஸ்
ரூட்டில்
எல்லாம்
பயணிக்காமல்
நடிகர்
அசோக்
செல்வன்
தனக்கு
பிடித்த
நல்ல
கதைகளை
தேர்வு
செய்து
வித்தியாசமாக
நடித்து
வருகிறார்.
தெகிடி,
ஓ
மை
கடவுளே
உள்ளிட்ட
படங்கள்
அவருக்கு
நல்ல
வெற்றியைத்
தேடித்
தந்தது.
அவர்
நடிப்பில்
வெளியான
பல
படங்கள்
குறிப்பாக
இந்த
ஆண்டு
வெளியான
படங்கள்
பெரிதாக
கை
கொடுக்கவில்லை.

5 படம் ஃபிளாப்
நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம் மற்றும் நித்தம் ஒரு வானம் உள்ளிட்ட 5 படங்கள் ஃபிளாப் என ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டிருந்தார். மேலும், சசிகுமார் நடித்த 3 படங்கள் மற்றும் அதர்வா நடித்த 3 படங்களும் இந்த ஆண்டு தோல்வியை அடைந்ததாக ட்வீட் போட்டிருந்தார்.

குரைக்கிற நாய் குரைக்கட்டும்
சசிகுமார் மற்றும் அதர்வா ப்ளூ சட்டை மாறனின் இந்த ட்வீட்டை கண்டு கொள்ளவில்லை. ஆனால், நடிகர் அசோக் செல்வன் சட்டென சூடாகி விட்டார் போல.. ப்ளூ சட்டை மாறனை குறிப்பிடாமல், "குரைக்கிற நாய் குரைக்கட்டும்.. அதை இக்னோர் செய்து விட்டு நாம் நம் வளர்ச்சியை நோக்கி பயணிப்போம்" என அசோக் செல்வன் பதிலடி கொடுத்திருந்தார்.

என்ஜாய் தி பிஸ்கட்
வருஷத்துக்கு 5 படம் ஃபிளாப் என்பது சரியான வளர்ச்சி இல்லை. தயாரிப்பாளர்களின் பணத்தை வீணாக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ட்வீட் மூலம் குரைப்பது நல்லது கிடையாது குழந்தை.. என்ஜாய் தி பிஸ்கட் என காரசாரமாக ப்ளூ சட்டை மாறன் தனது பதிலடியை கொடுத்துள்ளார்.

எதிர்ப்பும் ஆதரவும்
ப்ளூ சட்டை மாறனுக்கும் அசோக் செல்வனுக்கும் இடையே வெடித்துள்ள இந்த திடீர் மோதல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அசோக் செல்வன் நடித்த படங்கள் எல்லாம் நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் என அவருக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சிலர், ப்ளூ சட்டை மாறனின் விமர்சனம் சரியான ஒன்று தான் நல்ல படங்களை தேர்வு செய்து அடுத்த ஆண்டு வெற்றி நாயகனாக மாறுங்கள் என சில ரசிகர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.