மறக்குமா நெஞ்சம் - இயக்குனர் ராகோ யோகன்றன் இயக்கத்தில் ரக்ஷன், மலினா, தீனா என பல பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கும் நகைச்சுவை & குடும்பத் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ரகு எள்ளுரு தயாரிக்க, இசையமைப்பாளர் சச்சின் வாரியர் இசையமைத்துள்ளார்.
குடும்பங்கள் ரசிக்கும் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கோபி துரைசாமி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பாலமுரளி & ஷஷாங்க் மலி இணைந்து எடிட்டிங் செய்துள்ளார். ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றி வரும் ரக்ஷன் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
இப்படம் 2024 பிப் மாதம் 2ல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யூ' சான்றிதழ் அளித்துள்ளது.