மெஹந்தி சர்கஸ் கதை

  மெஹந்தி சர்கஸ் இயக்குனர் சரவணா ராஜேந்திரன் இயக்கத்தில் புதுமுக நடிகர் மதம்பட்டி ரங்கராஜ், ஸ்வேதா த்ரிபாதி மற்றும் வேல ராமமூர்த்தி நடித்துள்ள காதல் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கே இ ஞானவேல் ராஜா தயாரிக்க, இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

  கதை
  மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு ஊரில், ஒரு நடுத்தர வயது பெண் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக கட்டிலில் கிடக்கிறார். அந்த பெண்ணின் கணவரை அழைத்து வர, அவரது மகள் உறவினர் ஒருவருடன் புறப்படுகிறார்.

  மகாராஷ்டிராவில் இருந்து அப்படியே கொடைக்கானல் பூம்பாறைக்கு பயணிக்கிறது கதை. பிளாஷ் பேக் காட்சிகள் விரிகின்றன. பூம்பாறையில் ராஜகீதம் என்ற பெயரில் கேசட் கடை வைத்திருக்கும் இளைஞன் ஜீவா (மாதம்பட்டி ரங்கராஜ்), அந்த ஊரில் சர்க்கஸ் கூடாரம் அமைத்திருக்கும் சன்னி சார்லஸின் மகள் மெஹந்தியை (ஸ்வேதா திரிபாதி) காதலிக்கிறார். மெஹந்திக்கும் ஜீவா மீது காதல் மலர்கிறது.

  சாதி வெறிப்பிடித்த ஜீவாவின் தந்தை ராஜாங்கம் (மாரிமுத்து), காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். அதேபோல் மெஹந்தியின் தந்தையும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, ஹீரோயினின் உறவுக்கார பையன் ஜாதவின் (அஞ்சுர் விகாஷ்) உதவியுடன் காதல் தொடர்கிறது.

  ஒருகட்டத்தில் எதிர்ப்பு அதிகமாகவே, மெஹந்தியின் தந்தையிடமே நேரடியாக சென்று பெண் கேட்கிறார் ஜீவா. மரண விளையாட்டான கத்தி வீச்சில் வெற்றி பெற்றால் பெண் தருவதாக சம்மதிக்கிறார் சன்னி சார்லஸ். கத்தி வீச்சில் ஜெயித்து மெஹந்தியின் கரம் பிடித்தாரா ஜீவா?, மகாராஷ்டிராவில் இருந்து வந்த பெண் யார் என்பது தான் மீதிக்கதை.
  **Note:Hey! Would you like to share the story of the movie மெஹந்தி சர்கஸ் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).