X
தமிழ் » திரைப்படங்கள் » மெஹந்தி சர்கஸ்
மெஹந்தி சர்கஸ்

மெஹந்தி சர்கஸ்

Romance | 19 Apr 2019 | U | 135 Mins
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

மெஹந்தி சர்கஸ் கதை

மெஹந்தி சர்கஸ் இயக்குனர் சரவணா ராஜேந்திரன் இயக்கத்தில் புதுமுக நடிகர் மதம்பட்டி ரங்கராஜ், ஸ்வேதா த்ரிபாதி மற்றும் வேல ராமமூர்த்தி நடித்துள்ள காதல் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கே இ ஞானவேல் ராஜா தயாரிக்க, இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். கதை மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு ஊரில், ஒரு நடுத்தர வயது பெண் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக கட்டிலில் கிடக்கிறார். அந்த பெண்ணின் கணவரை அழைத்து வர, அவரது மகள் உறவினர் ஒருவருடன் புறப்படுகிறார். மகாராஷ்டிராவில் இருந்து அப்படியே கொடைக்கானல் பூம்பாறைக்கு பயணிக்கிறது கதை. பிளாஷ் பேக் காட்சிகள் விரிகின்றன. பூம்பாறையில் ராஜகீதம் என்ற பெயரில் கேசட் கடை வைத்திருக்கும் இளைஞன் ஜீவா (மாதம்பட்டி ரங்கராஜ்), அந்த ஊரில் சர்க்கஸ் கூடாரம் அமைத்திருக்கும் சன்னி சார்லஸின் மகள் மெஹந்தியை (ஸ்வேதா திரிபாதி) காதலிக்கிறார். மெஹந்திக்கும் ஜீவா மீது காதல் மலர்கிறது. சாதி வெறிப்பிடித்த ஜீவாவின் தந்தை ராஜாங்கம் (மாரிமுத்து), காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். அதேபோல் மெஹந்தியின் தந்தையும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, ஹீரோயினின் உறவுக்கார பையன் ஜாதவின் (அஞ்சுர் விகாஷ்) உதவியுடன் காதல் தொடர்கிறது. ஒருகட்டத்தில் எதிர்ப்பு அதிகமாகவே, மெஹந்தியின் தந்தையிடமே நேரடியாக சென்று பெண் கேட்கிறார் ஜீவா. மரண விளையாட்டான கத்தி வீச்சில் வெற்றி பெற்றால் பெண் தருவதாக சம்மதிக்கிறார் சன்னி சார்லஸ். கத்தி வீச்சில் ஜெயித்து மெஹந்தியின் கரம் பிடித்தாரா ஜீவா?, மகாராஷ்டிராவில் இருந்து வந்த பெண் யார் என்பது தான் மீதிக்கதை.
Read More

மெஹந்தி சர்கஸ் நடிகர்கள் & படக்குழுவினர்

மெஹந்தி சர்கஸ் அணியின் தகவல்

இயக்குனர் சரவணா ராஜேந்திரன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை சீன் ரோல்டன்
தயாரிப்பாளர் கே இ ஞானவேல் ராஜா
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

மெஹந்தி சர்கஸ் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
வட இந்திய பெண்ணாகவே படம் முழுவதும் வருவதால், அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார் ஸ்வேதா திரிபாதி. சர்க்கஸ், காதல், வேதனை என ஒவ்வொரு காட்சியிலும் நன்றாக நடித்துள்ளார். ஆர்ஜே விக்னேஷ்காந்தின் காமெடி பல இடங்களில் ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. சில வசனங்களில், அவரையும் மீறி ராஜூ முருகன் தான் வெளியே தெரிகிறார். சர்ச் பாதர் வேல.ராமமூர்த்தி, அஞ்சுர் விகாஷ், மாரிமுத்து, பூஜா, சன்னி சார்லஸ் என அனைவருமே தங்கள் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்கள். தலைப்பை தவிர வேறு எந்த புதிய ஆச்சரியங்களும் இல்லாமல், ஏற்கனவே பார்த்த பல படங்களின் கலவையாக தான் வந்திருக்கிறது மெஹந்தி சர்க்கஸ். இடைவெளி காட்சியும், க்ளைமாக்ஸ் காட்சியும், யதார்த்தமாக நகரும் படத்தை, அப்படியே கமர்சியல் சினிமாவாக மாற்றிவிடுகின்றன. எளிதில் யூகிக்கக் கூடிய திரைக்கதையும் படத்தின் மிகப் பெரிய பலவீனம். சர்க்கஸ் வித்தை காட்டி, புதிய கிளாஸில் பரிமாறப்பட்ட பழைய ஒயின் இந்த 'மெஹந்தி சர்க்கஸ்'.

மெஹந்தி சர்கஸ் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு
  • Awesome movie...Akshay is acting is superb..Akshay n Ritesh chemistry is gr8 as comapred to akshay n deepika...We can see a new Jiah Khan..Lara is superb in her comic role..

×
2.5 /5 Your Rating

மெஹந்தி சர்கஸ்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+