twitter
    Tamil»Movies»Mei»Story

    மெய் கதை

    மெய் இயக்குனர் பாஸ்கரன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர் நடித்த அதிரடி மற்றும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை சுந்தரம் ப்ரோடுக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் ப்ரிதிவி குமார் இசையமைத்துள்ளார்.

    கதை
    நாயகன் அபினேஷ் சந்திரன் (நிக்கி சுந்தரம்) அமெரிக்க வாழ் இந்தியர். மருத்துவம் படித்திருக்கும் அபி, தனது தாயின் இறப்பினால் மனதளவில் பாதிக்கப்படுகிறார். அவரை சென்னையில் உள்ள தனது சொந்தக்காரர் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார் அபியின் தந்தை.

    சென்னை வரும் அபிக்கு அவரது மாமா ஜார்ஜின் மருந்துக்கடையில் பொழுது போக்குவது தான் முக்கிய வேலை. அங்கு வேலை பார்க்கும், பழைய ஜோக் தங்கதுரை மற்றும் பாலா ஆகியோர் அபிக்கு நண்பர்களாகின்றனர். மருந்துக்கடைக்கு வரும் ஏழை எளிய மக்களுக்கு பணம் ஏதும் வாங்காமல் வைத்தியம் பார்க்கிறார் அபி. இதனால் பிரபலமாகிறார் பாரின் டாக்டர்.

    இதற்கிடையே ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கும் சார்லியின் மகள் நர்மதா திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கில் போலீசார் மெத்தனமாக செயல்படுவதை கண்டித்து போராட்டம் நடத்துகிறார் சமூக அக்கறை அதிகம் கொண்ட மெடிக்கல் ரெப்பான ஐஸ்வர்யா ராஜேஷ். இவருக்கும் அபிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறுகிறது. 

    இந்நிலையில் மருத்துக்கடையில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது பாலாவுக்கு வலிப்பு நோய் ஏற்படுகிறது. அவருக்கு ஒரு ஊசி போட்டு முதலுதவி செய்கிறார் அபி. பிறகு ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் பாலா, அடுத்த சில மணி நேரத்தில் இறந்து போகிறார். பாலாவின் சடலத்தை வாங்க மறுத்து உறுப்பினர்கள் போராட்டம் நடத்த, அபி போட்ட ஊசியால் தான் பாலா இறந்துவிட்டதாக பழி சுமத்துகிறார்கள். இதனால் போலி டாக்டர் என முத்திரைக் குத்தப்பட்டு போலீசாரால் கட்டம் கட்டப்படுகிறார் அபி. இந்த சிக்கலில் இருந்து அபி எப்படி தப்பிக்கிறார் என்பதே மீதிக்கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie மெய் with us? Please send it to us ([email protected]).