twitter

    எம் ஜி ஆர் மகன் கதை

    எம் ஜி ஆர் மகன் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார், சத்யராஜ், மிருணாளினி ரவி, சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி என தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்திருக்கும் நகைச்சுவை - அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை 'ஸ்கிரீன் சீன் மீடியா என்டேர்டைன்மெண்ட்' தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் அந்தோணி தாசன் இசையமைத்துள்ளார்.

    நகைச்சுவை மற்றும் அதிரடி திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன் எடிட்டிங் செய்துள்ளார். எம்.ஜி.ஆர் மகன் திரைப்படத்தினை தமிழ் திரைப்பட ரசிகர்கள் குடும்பங்களோடு கண்டு ரசிக்கும் வண்ணத்தில் உருவாக்கியுள்ளனர் படக்குழுவினர். பிரபல பின்னணி பாடகராக தமிழ் திரையுலகில் பணியாற்றிய அந்தோணி தாசன் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

    இத்திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா நோய் பரவல் காரணத்தால் தமிழக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில், இப்படம் வெளியீட்டிற்கு தள்ளிச்சென்று, இறுதியாக 2021 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 4ல் 'டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்' என்ற ஆன்லைன் இணையதள ஓடிடி செயலியில் வெளியாகிறது.


    **Note:Hey! Would you like to share the story of the movie எம் ஜி ஆர் மகன் with us? Please send it to us ([email protected]).