மைக்கேல் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் விஜய் சேதுபதி, சுதீப் கிஷான், வரலக்ஷ்மி சரத்குமார், கவுதம் மேனன், அய்யப்பா என பல திரைப்பட நட்சத்திரங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை கரண் புரோடக்ஷன் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.
காதல் - அதிரடி & திரில்லர் திரைக்கதையில் ஒரு சுவாரஸ்யமான படலமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் சத்யநாராணயன் எடிட்டிங் செய்துள்ளார்.
மைக்கேல் திரைப்படம், ஒரு பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழியில் 2023 பிப்ரவரி 03ல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது.
கதை
மும்பை தாதா குரு (கவுதம் மேனன்) சிலரால் தாக்கப்படுகிறார், அங்கிருந்து அவரை மைக்கேல் (சுந்தீப்) காப்பாற்றுகிறார். இதனால் குரு - மைக்கேல் இடையே நட்பு உண்டாகிறது. மைக்கேலை டெல்லிக்கு அனுப்பி அங்கு வாழும் தனது மகளை பாதுகாக்குமாறு சொல்கிறார், குரு.
டெல்லியில் மைக்கேல் - தீரா (திவ்யான்ஷா கவுசிக்) இடையே காதல் மலர்கிறது. பின் என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை.