மிக மிக அவசரம் கதை

    மிக மிக அவசரம் தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம். இத்திரைப்படத்தில் ஸ்ரீ பிரியங்கா, ராமதாஸ் என பலர் நடித்துள்ளனர். இத்திரைப்பத்திற்கு தயாரிப்பாளராக இவரே பணியாட்டியுள்ளார், இப்படத்திற்கு இசையமைப்பாளர் இஷான் தேவ் இசையமைத்துள்ளார்.

    மிக மிக அவசரம் படத்தின் கதை

    படத்தில் உயர் காவல்துறை அதிகாரி எப்படி தனக்கு கிழே பணிபுரியும் ஒரு பெண் காவல்துறை அதிகாரியை, தனது சொந்த பகைக்காக கொடுமைப்படுத்துகிறார் என்பது தான் இந்த படத்தின் முக்கியமான கதைக் கரு. அந்த பெண் காவல் அதிகாரி ஒரு பாலத்திற்கு மேல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். காலை முதல் மாலை வரை அவர் அனுபவிக்கும் சங்கடங்களை, சந்திக்கும் மனிதர்களை, உடல் ரீதியான பிரச்சனைகளை மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் சிறப்பாக செய்திருக்கிறார் ஸ்ரீ பிரியங்கா.

    பொதுவாகவே பெண்கள் சமூகத்தில் பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதுவே ஒரு காவல்துறை அதிகாரியாக இருக்கும் போது அவர்கள் எப்படி தங்களுடைய சொந்த வாழ்க்கை, பணிபுரியும் இடம், தனிப்பட்ட விஷயம் என பல விஷயங்களால் எப்படி பாதிக்கப்படுகிறார்கள். அதை எப்படி சமாளித்து அந்த பிரச்சனைகளில் இருந்து வெளிவருகிறார்கள் என்பது தான் இப்படத்தின் கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie மிக மிக அவசரம் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).