X
மிருதன்
Romance | Thriller | 19 Feb 2016 | U |
Tamil

மிருதன் கதை

மிருதன் "நாய்கள் ஜாக்கிரதை" இயக்குனர் சக்தி சௌந்தராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் லக்ஷ்மி மேனன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் காதல் திரைப்படம். இவர்களுடன் காளி வெங்கட், ஸ்ரீமன், ஆர் ஏன் ஆர் மனோகர் மற்றும் பலர் துணை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுத டி இமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம், தமிழ் திரைப்பட வரிசையில் எடுக்கப்பட்ட முதல் ஜூம்பி வகை திரைப்படமாகும்.

கதை :

அண்ணன் ஜெயம் ரவி மற்றும் தங்கை அனிகா இருவரும் ஊட்டியில் வாழ்ந்து வருகின்றனர். தங்கைக்காக எதையும் செய்யும் அண்ணனாக வரும் ஜெயம் ரவி ஊட்டியில் டிராபிக் எஸ் ஐ ஆக பணிபுரிந்து வருகின்றார். ஒரு விபத்தில் ஜெயம் ரவி மருத்துவரான லக்ஷ்மி மேனனை சந்திக்கின்றார். கண்டதும் காதல் போல இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். 

அதே வேளையில் மற்றொரு புறத்தில், ஒரு தொழிற்சாலையில் இருந்து கெமிக்கல் ஏற்றிச் செல்லும் ஒரு லாரி, தடம் புரல்வதால், அதனுள் இருக்கும் கெமிக்கல் அனைத்தும் வெளியே கொட்டிவிடுகிறது. அந்த கெமிக்கலை ஒரு நாய் ஒன்று குடிக்க, அதன் விளைவாக, அந்த நாய் வெறி பிடித்து ஒரு மனிதரை கடித்து விடுகிறது. 

நாயிடம், கடிப்பட்ட மனிதனின் உடலுக்குள் அந்த வைரஸ் தீவரமாக பரவ, அவருக்குள் ஒருவிதமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அவர் மற்றவர்களை கடிக்க ஆரம்பிக்கிறார். இப்படியே ஒருவர் மாற்றி ஒருவர் கடிக்க, அந்த வைரஸ் ஊர் முழுக்க பரவுகிறது.

நிலைமை தீவிரம் அடைகிறது. இதனால், போலீஸ் அந்த ஊருக்குள் யாரும் வரக்கூடாது என்றும், ஊரை விட்டு யாரும் வெளியே செல்லக்கூடாது என்றும் ஆணை பிறப்பிக்கிறது. மேலும் இந்த வைரஸால் தாக்கப்பட்டவர்களை சுட்டுத் தள்ளவும் ஆணை பிறப்பிக்கின்றனர்.

இந்த பிரச்சினைக்கு என்னதான் தீர்வு என்று லட்சுமி மேனன் மற்றும் ஒரு மருத்துவக்குழு ஜெயம் ரவியின் உதவியுடன், கோவையில் இருக்கும் மருத்துவமனையில் வைரஸை அழிக்கக்கூடிய மருந்தை கண்டுபிடிக்க செல்கின்றனர். ஆனால், இவர்களை வைரஸ் தாக்கப்பட்ட மனிதர்கள் செல்லவிடாமல் தடுக்கிறார்கள். 

நடக்கும் கலாட்டாவில் ஜெயம் ரவியும் பாதிக்கப்படுகின்றார். அனைத்து தடைகளை மீறி லக்ஷ்மி மேனன் மற்றும் ஜெயம் ரவி கோவை சென்றனரா? அந்த வைரசை அழிக்க மருந்து கண்டுபிடிக்கப்பட்டதா? அவர்களுக்கு நேர்ந்தது என்ன என்பதே மீதி கதை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+