மிஷன்: சேப்டர் 1 (அச்சம் என்பது இல்லையே) - இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் என பல முன்னணி திரை நட்சத்திரங்கள் நடித்திருக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம். தமிழ் சினிமா முன்னணி தயாரிப்பு நிறுவனம் லைக்கா நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
அதிரடி - கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள மிஷன்: சேப்டர் 1 (அச்சம் என்பது இல்லையே) படத்திற்கு ஒளிப்பதிவாளர் சந்தீப் விஜய் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் அந்தோனி எடிட்டிங் செய்துள்ளார்.
மிஷன்: சேப்டர் 1 (அச்சம் என்பது இல்லையே) திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படம் 2024 பொங்கல் பண்டிகை தின ஸ்பெஷல் படமாக தமிழ் சினிமாவில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் மிஷன் 1 படத்தினை லைக்கா புரொடக்சன் நிறுவனம் மூலம் உலகமுழுவதும் விநியோகம் செய்துள்ளார்.
அச்சம் என்பது இல்லையே என்ற தலைப்பில் இப்படம் தொடங்கப்பட்டு இறுதி நேரத்தில் மிஷன்: சேப்டர் 1 (அச்சம் என்பது இல்லையே) என்ற தலைப்பு மாற்றப்பட்டது. இப்படம் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழியில் டப்பிங் செய்யப்பட்டு ஒரு பான் இந்திய படமாக 2024 ஜனவரி 12ல் வெளியாகியுள்ளது.
மிஷன்: சேப்டர் 1 (அச்சம் என்பது இல்லையே) திரைப்படத்தின் கதை
லண்டனில், உளவாளியாக அருண் விஜய் யாருக்கும் தெரியாமல் அடையாளத்தை மறைத்து ஒரு மிஷின்க்காக செல்கிறார். அவர் மேற்கொண்ட பணியில் சிக்கல் ஏற்பட லண்டன் போலீஸாரால் பிடிபட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். அங்கு அவர் ஒரு கலவரத்தை உருவாக்கி சிறையிலிருந்து தப்பித்து தனது மகளைப் பார்க்க வருகிறார், ஆனால் அருண் விஜயை இந்த ரகசிய பணிக்காக அனுப்பியவர் அருண் விஜய்யின் மகளை பிணை கைதியாக கொண்டு செல்கிறார், தன் மகளை காப்பாற்ற அருண் விஜய் அந்த வேலையை எப்படி செய்து முடிக்கிறார், என்பதே மிஷன்: சேப்டர் 1 (அச்சம் என்பது இல்லையே) திரைப்படத்தின் கதை.