முத்தின கத்திரிக்காய் இயக்குனர் சுந்தர் சி-யின் உதவி இயக்குனர் வெங்கட் இயக்கத்தில் சுந்தர் சி, பூனம் பஜ்வா, சதீஷ் மற்றும் கிரண் ஆகியோர் நடிக்கும் நகைச்சுவை காதல் திரைப்படம். இத்திரைப்படம் மலையாள திரைப்படமான வெள்ளிமூங்கா திரைப்படத்தின் மீளுருவாக்கம் ஆகும்.
கதை :
சுந்தர் சி-யின் தாத்தா மற்றும் அப்பா அரசியலில் இருந்தவர்கள். அவர்களால் அரசியலில் சாதிக்க முடியாததை, தான் சாதித்தே ஆகவேண்டும் என்று முயற்சிக்கிறார். அதே நேரம் சுந்தர சிக்கு 40 வயதாகியும் திருமணம் நடக்காமல் இருக்கிறது. இவர் எவ்வாறு அரசியலில் வெற்றி பெற்று திருமணமும் செய்கிறார் என்பதே நகைச்சுவையான முத்தின கத்திரிக்காய் கதை ஆகும். இங்கு முத்தின கத்திரிக்கையாக சுந்தர் சி வருகிறார்.