முத்துராமலிங்கம் நடிகர் கெளதம் கார்த்திக், பிரியா ஆனந்த், பிரபு, சுமன், ராதா ரவி, விவேக், சுகன்யா, ரேகா, சிங்கம் புலி மற்றும் சிங்கமுத்து ஆகியோரின் நடிப்பில் இயக்குனர் ராஜதுரை இயக்கியுள்ள காதல் மற்றும் அதிரடித் திரைப்படம்.
இத்திரைப்படத்திற்கு பஞ்சு அருணாசலம் பாடல் வரிகளை எழுத, இளையராஜா இசையமைக்கின்றார். இளையராஜா மற்றும் பஞ்சு அருணாசலத்தின் கூட்டணி 21 வருடங்களுக்கு பிறகு இணைந்துள்ளது. பஞ்சு அருணாச்சலம் நடிகர் முத்துராமன், நடிகர் கார்த்திக் மற்றும் தற்போது நடிகர் கெளதம் கார்த்திக் என மூன்று தலைமுறைக்கு பாடல் எழுதியுள்ளார்.