நாடோடிகள் 2 கதை

  நாடோடிகள் 2 இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், அஞ்சலி, அதுல்யா ரவி, பரணி நடித்துள்ள அதிரடி திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் எஸ் நந்தகோபால் மற்றும் சமுத்திரக்கனி தயாரிக்க, இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

  அதிரடி மற்றும் சமுதாய கருத்துகள் உள்ள படமாக உருவாகும் இப்படத்தினை ஒளிப்பதிவாளர் என் கே ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் எ. எல் ரமேஷ் எடிட்டிங் செய்துள்ளார்.

  நாடோடிகள் 2 படத்தினை பற்றிய பிரத்யேக தகவல்கள்

  2009ம் ஆண்டு சசிகுமார், சமுத்திரக்கனி கூட்டணியில் உருவான நாடோடிகள் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இப்படம் உருவாகியுள்ளது. சமீபகாலமாகவே வெற்றி பெற்ற படத்தின் கூட்டணிகள் அதே தலைப்பில் அப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக்கி பிரபலமாகின்றனர்.

  சுமார் 11 ஆண்டுகள் கழித்து இப்படம் 2009ம் ஆண்டு வெளியான நாடோடிகள் படத்தின் தொடர்ச்சியாக வெளியாகியுள்ளது. நாடோடிகள் படத்தின் நட்பு மற்றும் காதல் என இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை பற்றி எடுத்துரைத்த இயக்குனர் சமுத்திரக்கனி, இப்படத்தில் அரசியல் மற்றும் சமுதாய சீர்திருத்தம் என சில விஷயங்களை கையாண்டுள்ளார்.

  இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் 2018 ஜனவரி மாதம் இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார். 2018 மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு, 2018 இறுதியில் இப்படத்தினை முற்றிலும் முடித்துவிட்டு ரிலீஸ்க்கு தயாராகி வந்துள்ளனர்.

  2009 (நாடோடிகள்) படத்தில் நடித்து தமிழ் திரையில் புகழ்பெற்ற பரணி, நமோ நாராயண இப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளர்னர். பல எதிர்பார்ப்புகள் மற்றும் பிரச்சனைகளுக்கு பின்னர் இப்படம் 2020 ஜனவரி 31ல் யு/எ சான்றிதழினை பெற்று திரைக்கு வந்துள்ளது.

  நாடோடிகள் 2 படத்தின் கதை

  சசிகுமார் சமூகத்தில் ஒரு ஜாதியற்ற தலைமுறையை உருவாக்க போராடி வருகிறார். இவருக்கு ஆதரவாக அஞ்சலி, பரணி மற்றும் ஒரு பெரியவர் உள்ளனர். படம் முழுக்க தோழர், சகோ என்னும் வார்த்தைகளை கொண்டு பேசிவரும் இந்த குழு, ஜாதியுள்ள சமுதாயத்திற்கு எதிராக பல குரல்களை எழுப்பியும், சண்டையிட்டும் போராடி வருகிறார்கள்.

  இதனால் சசிகுமாருக்கு யாரும் பெண் தருவதற்கு முன்வரவில்லை. இவரின் சொந்த மாமா கூட இவரின் செயல்களால் அஞ்சி பெண் தராமல் பின்வாங்குகிறார். நாயகி அதுல்யாவின் தந்தை இவருக்கு தாமாக முன்வந்து பெண் தருகிறார். இவருக்கு திருமணம் நடந்து முதல் இரவில் அதுல்யாவின் கடந்த கால வாழ்க்கையை பற்றி அறியும் சசிகுமார் அதிர்ச்சியடைகிறார்.

  பின் ஜாதிக்கு எதிராக இவர் கடுமையாக குரல் உயர்திகிறார். இதனால் ஏற்படும் பிரச்சனைகளே இப்படத்தின் கதை.
  **Note:Hey! Would you like to share the story of the movie நாடோடிகள் 2 with us? Please send it to us (popcorn@oneindia.co.in).