நான் சிரித்தால் கதை

  நான் சிரித்தால் இயக்குனர் இராணா இயக்கத்தில் ஆதி, ஐஸ்வர்யா மேனன், ஷாரா, கே எஸ் ரவிக்குமார் நடித்துள்ள நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி தனது அவ்னி மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா இசைக்குழு இப்படத்திற்கு இசையமைத்துள்ளது.

  காதல் காட்சிகள் உள்ள ஒரு நகைச்சுவை படமாக உருவாகும் இப்படத்தினை ஒளிப்பதிவாளர் வாஞ்சிநாதன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் சாரங் எடிட்டிங் செய்துள்ளார். இப்படம் 2020 காதலர் தினத்தை முன்னிட்டு பிப்-14 அன்று வெளியாகியுள்ளது.

  கதைக்கரு

  வாழ்க்கையில் எந்த ஒரு நிகழ்வுகளை எதிர்கொள்ளும் போது சிரிக்கும் வியாதி உடன் உள்ள ஹிப்ஹாப் ஆதி. இந்த வித்தியாசமான வியாதியோடு தனக்கு ஏற்படும் பிரச்சனைகளை அவர் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதே நான் சிரித்தால் படத்தின் கதைக்கரு

  நான் சிரித்தாள் படத்தின் கதை


  காந்தி (ஆதி) தனது வாழ்க்கையில் தான் அனுபவிக்கும் சில உணர்வுகளில் தன்னை அறியாமல் சிரிக்கும் ஒரு நோய்யை கொண்டவர். ஆதி வாழ்க்கையில் உணர்ச்சிப் பூர்வமான பல இடங்களில் சிரித்து பலரை அவமதித்துள்ளார். அழுகை, பயம், ஆச்சிரியம், கவலை என எல்லா உணர்வுகளிலும் சிரிக்கும் இவர் இதற்காக பலரால் வெறுக்கப் படுகிறார்.

  இப்படத்தின் தொடக்கத்தில் "வினோத மனிதர்கள்" என்ற நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கு பெற்று தன் வாழ்க்கையில் நடந்த பல சுவாரஸ்ய நிகழ்வுகளை பகிர்கிறார். பிறப்பிலேயே இந்த நோயினால் பாதிக்கப் படும் இவர், பல இடங்களில் இதற்காக சந்தோஷப்பட்டாலும், பல நேரங்களில் இதற்கான கவலையில் தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

  ஒரு ஐ.டி நிர்வாகத்தில் வேலை, காதல் என தனது வாழ்க்கையை வாழும் அதி இந்த வியாதியால் தனது வேலையையும், காதலையும் இழக்கிறார். பின்னர் தனது நண்பன் ஒருவர் தொலைந்து விட அவரை தேடும் ஆதி தவறுதலாக கே எஸ் ரவிக்குமாரிடம் சிக்குகிறார்.

  ரவிக்குமார் ஒரு பெரிய ரௌடி. கே எஸ் ரவிக்குமாரிடம் சிக்கும் இவர் பயத்தில் சிரிக்க தொடங்குகிறார். இவரின் நோயையை பற்றி அறியாத ரவிக்குமார் கோபத்தில் இவரை கொலை செய்ய திட்டமிடுகிறார். இறுதியில் இந்த பிரச்சனையில் இருந்து இவர் எப்படி தப்பித்தார் என்பதே படத்தின் கதை.
  **Note:Hey! Would you like to share the story of the movie நான் சிரித்தால் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).