நம்ம வீட்டுப் பிள்ளை கதை

  நம்ம வீட்டுப் பிள்ளை இயக்குனர் பாண்டியராஜன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் குடும்பத்திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தனது சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ளர்.

  குடும்பம் மற்றும் காதல் கதையாக உருவாகும் இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாஹ் ஒளிப்பதிவில் படத்தொகுப்பாளர் ரூபன் எடிட்டிங் பணிசெய்துள்ளார்.

  நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தின் கதை

  ஒரு பெரிய தலைக்கட்டு குடும்பத்தில் தனது அப்பாவினை இழந்த சிவகார்த்திகேயன் பாசம் மற்றும் அங்கீகாரத்திற்காக அனைவரிடமும் பாசத்தை கொட்டி எந்த ஒரு விசேஷங்களிலும் முதல் ஆளாக நின்று இவரின் ஆதரவினை தெரிவித்து சொந்தபந்தங்களை விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்து வருகிறார்.

  சிவகார்த்திகேயனுக்கு துளசி என்ற தங்கை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளார். இவர்களுக்கு தந்தை இல்லாததால் இவர்களை மதிக்காமல், சிவகார்த்திகேயன் எந்த ஒரு விசேஷங்களிலும் சிறப்பாக வழிநடுத்துவதால் இவர் மேல் பொறாமையும், குடும்பத்தில் இவர்களுக்கு தரவேண்டிய அங்கீகாரத்தையும் தராமல் இவரையும் இவர் தங்கையையும் உதாசீனம் படுத்தி வருகிறார்கள் இவரின் சொந்தங்கள்.

  சொந்தபந்தங்களுக்கு மத்தியில் தன் தங்கை ஐஸ்வர்யா ராஜேஷ்-ற்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து வருகிறார் சிவா. ஆனால் யாருமே சிவா-வின் மேல் உள்ள பொறாமையால் துளசி (ஐஸ்வர்யா ராஜேஷ்)-யை கட்டிக்கொள்ள முன்வராமல் இருக்கின்றனர்.

  ஐஸ்வர்யா ராஜேஷ்-யை திருமணம் செய்வதற்கு நட்டி முடிவெடுக்கிறார். இவர் சிவா-வின் தங்கையை கட்டிக்கொள்ள முடிவெடுப்பதே இவரின் கடந்த பகை ஒன்றிற்கு பகை தீர்க்கத்தான். இது தெரியாமல் தங்கையை திருமணம் செய்து வைக்கிறார் சிவா. 

  திருமணத்திற்கு பிறகு நட்டி சிவகார்த்திகேயனை மதிக்காமல் அனைவரின் முன்னிலையிலும் உதாசீனம் படுத்த தொடங்குகிறார். சிவா தனது தங்கைக்காக இறங்கி செல்கிறார். இறுதியில் என்ன ஆனாது? அந்த பகை என்ன? என்பதே நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தின் மீதிக்கதை.

  நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தின் படக்குழு பற்றிய தகவல்கள்

  2018-ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படமான கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பாண்டியராஜ் அதே பாணியில் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ள திரைப்படம்.

  திரைப்படத்தின் மூலம் 2013-ஆம் ஆண்டு வெளியான "கேடி பில்லா கில்லாடி ரங்கா" திரைப்படத்திற்கு பிறகு 6 ஆண்டுகள் கழித்து இரண்டாவது முறையாக நடிகர் சிவகார்த்திகேயனும், இயக்குனர் பாண்டியராஜ்-யும் கூட்டணி அமைத்துள்ளனர்.

  நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அணு இம்மானுவல் நடிக்கவிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்த தகவலை தொடர்ந்து, சிவா கார்த்திகேயனுக்கு தங்கையாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளனர்.

  நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் நாயகியாக நடித்திருக்கும் அணு இம்மானுவல் விஷால் நடித்த துப்பறிவாளன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானவர். பின்னர் தனகையாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், 2018-ம் ஆண்டில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான "கனா" திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

  ப்ரோமோஷன்ஸ் / ரிலீஸ்

  நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் 2019 மே 8-லிருந்து தொடங்கியது. இத்திரைப்படத்தின் தலைப்பு மற்றும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2019 - ஆகஸ்ட் 12-ல் இணையத்தளத்தில் வெளியானது.

  நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படமானது 2019 செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ள நிலையில் இத்திரைப்படத்தின் பாடல்கள் சன் தொலைக்காட்சியில் பிரமாண்டமாக 2019 செப் 8-ல் படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. 
  **Note:Hey! Would you like to share the story of the movie நம்ம வீட்டுப் பிள்ளை with us? Please send it to us (popcorn@oneindia.co.in).