நட்புனா என்னனு தெரியுமா கதை

  நட்புனா என்னனு தெரியுமா இயக்குனர் சிவகுமார் இயக்கத்தில் கவின், அருண்ராஜா காமராஜ், ராஜு, ரம்யா நம்பீசன் நடித்த நகைச்சுவை காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பு நிறுவனமான லிப்ரா ப்ரோடுக்ஷன்ஸ் தயாரிக்க, இசையமைப்பாளர் தரன் இசையமைத்துள்ளார்.

  இத்திரைப்படத்தின் தலைப்பானது 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. மேலும் இத்தலைப்பினை மணிரத்னம் இயக்கிய தளபதி(1991) திரைப்படத்தில் வருகின்ற வசனம் ஒன்றினை சான்றாக கொண்டு உருவாக்கியுள்ளனர். மேலும் இப்படத்தின் நாயகனான கவின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமானவர்.

  கதை
  கவின், அருண்ராஜா காமராஜ், ராஜூ மூவரும் சிறுவயதில் இருந்தே பால்ய நண்பர்கள். இவர்கள் பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஏற்படும் ஒரு சம்பவத்தால் பெண்களை நம்ப கூடாது. இனி நமது வாழ்வில் பெண்களுக்கு இடம் கிடையாது என்று உறுதி கொள்கிறார்கள்.

  பத்தாம் வகுப்பினை கூட முடிக்காமல் வேலையின்றி ஊர் சுற்றி வரும் இவர்கள், வாழ்வில் சுயமாக ஒரு தொழில் தொடங்க முடிவு செய்கிறார்கள். திருமணத்திற்கு தேவையான அணைத்தையும் தயார் செய்து கொடுத்து திருமண நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பணியை தொடங்குகிறார்கள்.

  இந்நிலையில், ரம்யா நம்பீசனை பார்க்கும் ராஜூவுக்கு காதல் மலர்கிறது, பின்னர் அடிக்கடி ரம்யாவை பார்க்க செல்கிறார். ஒரு நாள் ராஜூ தனது நண்பர்களை கூட்டிச் சென்று ரம்யா நம்பீசனை காண்பித்து இவரை காதலிக்க போவதாக கூறுகிறார். ரம்யாவை பார்த்ததும் இருவருக்குமே பிடித்துப் போகிறது. அப்போது அருண்ராஜா காமராஜ் கவினை உசுப்பேற்றிவிட தீடிரென கவின் ரம்யாவிடம் சென்று காதலிப்பதாக கூறுகிறார். ரம்யாவும் அவர் காதலை எவ்வீத எதிர்ப்பும் இன்றி சம்மதிக்கிறார்.

  பின்னர் கவின் ரம்யாவின் காதல் ராஜுவிற்கு தெரியவருகிறது. இருவரும் சண்டைபோட்டு பிரிகின்றனர். அருண் ராஜா காமராஜ் ராஜுவின் பக்கம் சென்றுவிட, கவின் தனிமரமாக நிற்கிறார்.

  இறுதியில் பிரிந்த நண்பர்கள் இணைந்தார்களா? கவின் - ரம்யா நம்பீசன் காதல் என்ன ஆனது? அதன் பின்னணியில் நடப்பது என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.
  **Note:Hey! Would you like to share the story of the movie நட்புனா என்னனு தெரியுமா with us? Please send it to us (popcorn@oneindia.co.in).