நவரச திலகம் தமிழ் நகைச்சுவைத் திரைப்படம். இத்திரைப்படம் கம்ரனால் இயக்கப்பட்டு மா கா பா, ஸ்ருஷ்டி டாங்கே, கருணாகரன் மற்றும் சித்தார்த் விபின் ஆகியோர் நடித்துள்ளனர். சித்தார்த் விபின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கதை :
மா கா பா எந்த வேலைக்கும் செல்லாமல் தன்னுடைய அப்பாவானா இளவரசுவின் சொத்தினை மட்டும் அனுபவித்து ஊர் சுற்றும் இளைஞனாக வருகிரகிறார். இவருடன் நண்பனாக வருகிறார் கருணாகரன். ஒரு முறை எதார்த்தமாக ஸ்ருஷ்டியை சந்திக்கும் மா கா பா, காதலில் விழுகின்றார்.
ஸ்ருஷ்டியின் வீட்டில் தான் நல்ல பெயர் எடுக்க வேண்டுமென்று முயற்சி செய்கின்றார் மா கா பா. அதனால், ஸ்ருஷ்டியின் அக்காவுக்கு நிச்சயிக்கப்படும் மாப்பிள்ளையாக வரும் சித்தார்த் விபினுடன் நல்ல நட்புறவை ஏற்படுத்திக்கொள்கிறார்.
அதன்பின்னர் தான் சித்தார்த் விபின் தனக்கு தாய்மாமன் முறை என்றும் அவர் ஸ்ருஷ்டியின் அக்காவை திருமணம் செய்தல் தன்னால் ஸ்ருஷ்டியை திருமணம் செய்ய இயலாது என்று தெரிகின்றது. அதனால், சித்தார்த் விபினின் திருமணத்தை நிறுத்தும் முயற்சியில் ஈடுபடும் மா கா பா-வின் திட்டம் நிறைவேறியதா? இறுதியில் யாருடைய திருமணம் நின்றது? யாருடைய திருமணம் நடந்தது? என்பது நகைச்சுவையான மீதிக்கதை.