நீயா 2 கதை

  நீயா 2 இயக்குனர் சுரேஷ் இயக்கத்தில், ஜெய், ராய் லக்ஷ்மி, கேத்தரின் திரேசா, வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பலர் நடித்த தில்லார் படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஸ்ரீதர் அருணாச்சலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஷபீர் இசையமைத்துள்ளார்.

  இத்திரைப்படத்தின் ட்ரைலர் பிப்ரவரி 1-ல் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. மேலும் இத்திரைப்படம்  நாகினி, நந்தினி தொடர்களின் தொடர்ச்சியாக இச்சாதாரி நாகங்களின் கதையை மையமாக்கி உருவாகிருக்கிறது.

  கதை

  ஜெய் மற்றும் கேத்தரின் திரேசா(திவ்யா) இருவரும் திருமணத்திற்கு தயாராகி வருகின்றனர், இவர்களுக்கு திருமணமும் நடக்கிறது, பின்னர் இவர்களை வாழவிடாமல் ஒரு இச்சாதாரி நாகம் இடையூறாக வந்து இவர்களை பயமுறுத்தி திவ்யாவை கொல்ல நினைக்கிறது, இதனால் ஜோதிடர்களிடம் செல்கின்றனர் ஜெய்யின் குடும்பத்தார்கள்.

  ஜோதிடர்கள் ஜெய்க்கு நாகதோஷம் இருக்கிறது என்று கூற அதனால் அச்சம் கொள்கிறார்கள் குடும்பத்தார்கள், பின்னர் அந்த நாகம் இவர்களை வாழவிடாமல் செய்வதற்கு காரணத்தை கண்டறிகிறார்கள். 

  இப்படத்தில் இச்சாதாரி நாகமான ராய் லட்சுமி வருகிறார், சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் நாகம் என்று அறியாமலே ஜெய் - ராய் லக்ஷ்மியை காதலித்து திருமணம் செய்துள்ளார், பின் ஒரு விபத்தில் ராய் லட்சுமி காணாமல் போகிறார், இவர் கிடைக்காததால் பெற்றோரின் வேண்டுகோளின் படி வேறு ஒரு திருமணமாக கேத்தரின் திரேசா(திவ்யா)-வை மணக்கிறார்.

  தான் ஒரு நாகம் என்பதை மறந்து ஒரு மனிதன் உடன் வாழ் வேண்டும் என்று போராடுகிறார், ராய் லட்சுமி(நாகராணி). இதனை தடுக்க பலர் மந்திர தந்திரங்களை செய்து முயற்சி செய்கிறார்கள், பின்னர் மற்றொரு இச்சாதாரி நாகமாக வரலக்ஷ்மி வருகிறார். இறுதியில் வென்றது யார்? வரலக்ஷ்மி யார் பக்கம் நின்று போராடுகிறார்? என்பதே படத்தின் கதை.

  படத்தின் வெளியிட்டு தகவல்கள்

  இத்திரைப்படத்தின் இயக்குனர் சுரேஷ் 2011-ம் ஆண்டு விமல் நடித்த எத்தன் திரைப்படத்தினை இயக்கி திரையுலகிற்கு அறிமுகமானவர். இவரது இயக்கத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படமானது நீண்ட காலமாக வெளியிட்டுக்கு தயாராகி வந்துள்ளது.

  இறுதியில் இத்திரைப்படம் மே மாதம் 10-ம் தேதியில் வெளியாகும் என வெளிவந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தொடர்ந்து, ப்ரோமோஷன்ஸ் பணிகளில் தீவிரம் காட்டி வந்த படக்குழுவினர், பின்னர் இத்திரைப்படத்தினை மே 24-ம் தேதியில் வெளியிட முடிவு செய்தனர்.

  ஏனெனில் மே மாதல் கோடை விடுமுறை விருந்தாக தமிழில் மட்டும் 25 திரைப்படங்கள் வெளிவரவிருந்த நிலையில், மே 9ல் அதர்வாவின் 100 திரைப்படமும், மே 10ல் அயோக்கிய, கீ, என 8 திரைப்படங்கள் தமிழில் வெளியாகியுள்ளன. இக்காரணத்தால் இப்படத்தை வெளியிட போதிய தியேட்டர்கள் கிடைக்காததால் இப்படத்தின் விநியோகஸ்தர்களின் வேண்டுகோளின்படி இப்படத்தினை இரண்டு வாரங்கள் தள்ளி மே 24-ம் தேதியில் இப்படத்தினை வெளியிட முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர்.
  **Note:Hey! Would you like to share the story of the movie நீயா 2 with us? Please send it to us (popcorn@oneindia.co.in).