TamilbredcrumbMoviesbredcrumbNeeya 2
    நீயா 2

    நீயா 2

    U | 2 hrs 2 mins | Drama
    Release Date : 24 May 2019
    Director : சுரேஷ்
    2/5
    Critics Rating
    3.5/5
    Audience Review
    நீயா 2 இயக்குனர் சுரேஷ் இயக்கத்தில், ஜெய், ராய் லக்ஷ்மி, கேத்தரின் திரேசா, வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பலர் நடித்த தில்லார் படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஸ்ரீதர் அருணாச்சலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஷபீர் இசையமைத்துள்ளார்.

    இத்திரைப்படத்தின் ட்ரைலர் பிப்ரவரி 1-ல் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. மேலும் இத்திரைப்படம்  நாகினி, நந்தினி தொடர்களின் தொடர்ச்சியாக இச்சாதாரி நாகங்களின் கதையை மையமாக்கி உருவாகிருக்கிறது.

    • சுரேஷ்
      Director
    • ஸ்ரீதர் அருணாச்சலம்
      Producer
    • ஷபீர்
      Music Director
    • பில்மிபீட்
      2/5
      நாய், பாம்பு, குரங்கு என விலங்குகளை நடிக்க வைத்தால், படத்துக்கு மினிமம் கேரண்டி இருக்கும் என்பதாலேயே நீயா 2வை எடுத்திருக்கிறார் இயக்குனர் எல்.சுரேஷ். முதல் பாதி படம் கொஞ்சம் விறுவிறுப்பாக நகர்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் படத்தை நீட்டிக்கொண்டே போவதால் போதும் போதும் என்றாகிவிடுகிறது.

      பாம்புக்கும், நம் மக்களுக்கும் இடையே ஆதாம், ஏவாள் காலத்தில் இருந்தே ஒரு தொடர்பு இருக்கிறது. பாம்பு பற்றிய மூடநம்பிக்கையும், செண்டிமெண்டும் நம்மூரில் அதிகம் என்பதால் பாம்பு படங்களுக்கும் எப்போதுமே ஒரு மவுசு உண்டு. ஆனால் அதனை சரியாக பயன்படுத்த தவறிவிட்டார் இயக்குனர். சமூக வலைதளங்களின் ஆதிக்கம் உச்சத்தில் இருக்கும் இன்றைய காலகட்டத்தில், கதை மீது மக்களுக்கு நம்பதன்மையை ஏற்படுத்துவது மிகவும் சிரமம். அது தான் நீயா 2-ன் பிரச்சினையும்.

      கேத்ரின் தெரசாவுக்கு ஜெய்யை காதலிப்பதும், கிளாமர் காட்டுவதும் தான் முக்கியம் பணி. அதை செவ்வணே செய்திருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் மட்டும் கொஞ்சம் பெர்மானஸ் காட்டுகிறார். கேத்ரின் அளவுக்கு கூட முக்கியத்துவம் இல்லாத ரோல் வரலட்சுமிக்கு. ஒரு பாடலுக்கு நடனமாடி, நஞ்சை உமிழ்ந்து, சாபம் கொடுத்துவிட்டு சென்றிவிடுகிறார்...