நெற்றிக்கண் கதை

  நெற்றிக்கண் இயக்குனர் மிலிண்ட் ராவ் இயக்கத்தில், நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் கிரிஷ் ஜி இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் மணிகண்டன், சரண் (வடசென்னை), அஜ்மல் அமீர் என பலர் நடித்துள்ளனர்.

  அதிரடி மற்றும் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படதிற்கு ஒளிப்பதிவாளர் ஆர்.டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டர் லாரென்ஸ் கிஷோர் எடிட்டிங் பணி செய்துள்ளார். நயன்தாராவின் முன்னணி நடிப்பில் பெண்களுக்கான முக்கியத்துவம் கொண்ட திரைக்கதையில் உருவான நெற்றிக்கண் திரைப்படம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியில் 13 ஆகஸ்ட் 2021ல் நேரடியாக வெளியானது.
  நெற்றிக்கண் திரைப்படத்தின் கதை

  கதைக்கரு: பார்வையற்ற மாற்றுத்திறனாளி நயன்தாரா, வில்லனின் பார்வையில் சிக்குகிறார். தான் ஒரு மாற்றுத்திறனாளி என்பதை மறந்து ஒரு தைரியமான பெண்ணாக வாழும் நயன்தாரா, பல இன்னல்களை சந்தித்து தைரியமாகவும் நேரடியாகவம் அதனை எதிர்கொள்வதே இப்படத்தின் கதை.

  கதை 

  சி.பி.ஐ அதிகாரியாக படத்தில் அறிமுகமாகும் நயன்தாரா (துர்கா), தனது தம்பியின் நடவடிக்கையில் தவறு இருப்பதை அறிந்து அவரை கண்டித்து வருகிறார். தவறான நண்பர்களிடம் சேர்க்கை வைத்துக்கொள்ள கூடாது என க்ளப்பில் இருந்து தனது தம்பியை அழைத்து வரும் நேரத்தில் இவர்கள் பயணிக்கும் கார் விபத்துக்குள்ளாகிறது. அந்த காரில் இருந்து வெளியேறிய நயன், தனது பார்வையை இழக்க, தம்பி காரிலையே மாட்டி கொண்டு உயிரிழக்கிறார்.

  தனது பார்வையை இழந்த நயன்தாரா, இரண்டு வருடங்கள் தனிமையிலையே வாழ்வை கழிக்கிறார். ஒரு கண் சிகிச்சைகாக காத்திருக்கும் நயன்தாரா, கண் தானாம் கிடைக்காததால் அவரது சிகிச்சை தள்ளி போய்க் கொண்டே இருக்கிறது.

  இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள அஜ்மல் அமீர், பெண்களை கடத்தி அணு-அணுவாக சித்ரவதை செய்து கொலை செய்யும் ஒரு சைக்கோ. ஒரு நாள் டாக்ஸிக்காக காத்திருக்கும் நயன்தாராவை காணும் அஜ்மல் அமீர், ஒரு டாக்ஸி டிரைவராக அறிமுகமாகி நயன்தாராவை கடத்த முயற்சி செய்கிறார். ஆனால் வில்லனின் சூழ்ச்சியை அறியும் நயன், அங்கிருந்து தப்பிக்கிறார்.

  காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிசெய்யும் மணிகண்டன் நயன்தாராவை விசாரிக்கிறார். தொடக்கத்தில் அலட்சியகமாக கையாளும், மணிகண்டன் பின்னர் இந்த வழக்கின் முக்கியத்துவத்தை அறிந்து முழு முயற்சியுடன் தனது ப்ரோமோஷன்காக நயன்தாராவுடன் இணைந்து வழக்கை விசாரிக்கிறார்.

  அந்நேரத்தில் இந்த வழக்கை பற்றி துப்பு குடுப்பதற்காக சரண் (வடசென்னை அறிமுகம்) வருகிறார். சரண் குரல் மற்றும் அவரது தோரணை நயன்தாராவின் தம்பியை பிரதிபலிக்க அவர் மேல் பாசம் வைக்கிறார் நயன்தாரா. முதலில் நயன்தாராவுக்கு உதவ மறுக்கும் சரண், இரண்டாவது முறையாக அஜ்மலிடம் சிக்கும் நயன்தாராவை காப்பாற்ற உதவி செய்கிறார்.

  காவலர்கள் தன்னை தேடுவதை அறியும் அஜ்மல், இதற்கு காரணமான நயன்தாராவை பழிவாங்க முயற்சி செய்கிறார். அஜ்மல் பெண்களை கடத்தி சித்ரவதை செய்து கொள்ளும் அளவிற்கு காரணம் என்ன? இறுதியில் நயன்தாரா - அஜ்மல் அமீர் மோதலில் என நடந்தது என்பதே படத்தின் கதை.

  நெற்றிக்கண் திரைப்படத்தின் பிரத்யேக தகவல்கள்

  நயன்தாராவின் நெற்றிக்கண் திரைப்படம் விக்னேஷ் சிவன் - நயன்தாரா கூட்டணியில் தயாராகி ஆன்லைன் ஓடிடி தளத்திற்கு லாபத்துடன் நேரடியாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் நயன்தாரா கண் தெரியாத (பார்வையற்ற) மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு அதிரடி மற்றும் திரில்லர் திரைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது.

  2020 ஆம் ஆண்டின் தீபாவளி பண்டிகைக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆன்லைன் ஓடிடியில் நேரடியாக வெளியான நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன்' படத்தினை தொடர்ந்து, இப்படமும் அதே ஆன்லைன் ஓடிடியில் நேரடியாக வெளியாகியுள்ளது.

  இப்படத்தின் பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் பிரபலமான நிலையில், இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வீடியோக்களும் மக்களின் கவனத்தை பெற்றுள்ளது.

  நெற்றிக்கண் ஓடிடி ரிலீஸ்

  நெற்றிக்கண் திரைப்படம் சில காரணங்களால் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில் இப்படம் இணையதள ஓடிடி மூலம் தற்போது வெளியாகியுள்ளது. முதலில் கொரோனா காரணத்தால் வெளியீட்டிற்கு தள்ளிச்சென்ற இப்படம், பின்னர் ஆன்லைன் ஓடிடியில் வெளியிட திட்டமிட்டு 2021 ஆகஸ்ட் 13ல் நண்பகல் 12:15 மணியளவில் நேரடியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியில் வெளியானது.

  நெற்றிக்கண் திரைப்படத்தின் செயற்கைக்கோள் மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கான உரிமையை ஸ்டார் விஜய் நிறுவனம் பெற்றுள்ளது. நயன்தாராவின் முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம், 2021 சுதந்திர தினம் சிறப்பு திரைப்படமாக ஆன்லைன் ஓடிடி செயலியில் ஸ்ட்ரீமிங் செய்யபட்டுள்ளது.
  **Note:Hey! Would you like to share the story of the movie நெற்றிக்கண் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).