நினைத்தாலே இனிக்கும் 2009ல் வெளிவந்த திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை குமாரவேலன் இயக்கினார். இத்திரைப்படத்தில் பிரித்விராஜ் சுகுமாரன், சக்தி வாசுதேவன், கார்த்திக் குமார், பிரியாமணி, அனுஜா ஐயர், பாக்யராஜ், மனோபாலா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார்.
கிளாஸ்மெட்ஸ் என்ற மலையாளத் திரைப்படத்தின் மறு ஆக்கமாக இத்திரைப்படம் வெளிவந்தது. இந்த படத்தின் தலைப்பு 1979ல் வெளிவந்த தமிழ் படமான நினைத்தாலே இனிக்கும் திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்டது.