ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது இயக்குனர் ரமேஷ் வெங்கட் இயக்கத்தில் ராமதாஸ், யாஷிகா ஆனந்த், ஹரிஜ, ரித்விகா மற்றும் பல திரைப்பட நட்சத்திரங்கள் நடித்துள்ள நகைச்சுவை திகில் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ராஜன் தயாரிக்க, இசையமைப்பாளர் கௌஷிக் க்ரிஷ் இசையமைத்துள்ளார்.
நகைச்சுவை திரைக்கதையில் திகில் படமாக உருவாகியுள்ள 'ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜோஸ்வா ஜே ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் கணேஷ் சிவா எடிட்டிங் செய்துள்ளார்.
ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ள நிலையில், இப்படம் பல போராட்டங்களுக்கு பின் 2023 டிசம்பர் 29ல் தமிழ் சினிமாவில் வெளியாகியுள்ளது.
ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது திரைப்படத்தின் கதை
கதைக்கரு: ஒரு திரையரங்கில் படத்தை பார்க்க வரும் பார்வையாளர்கள் எதிர்பாராமல் ஒரு பிரச்சனையில் சிக்கி திரையரங்கில் மாட்டி கொள்கின்றனர். இவர்கள் அனைவரும் அந்த சிக்கலில் இருந்து எப்படி தப்பிக்கின்றனர், என்பதே இப்படத்தின் திகில் கதை.