ஒரு அடார் லவ் கதை

  ஒரு அடார் லவ் இயக்குனர் ஒமர் லுலு இயக்கத்தில் பிரியா பிரகாஷ் வாரியர் மற்றும் முகமத் ரோஷன் நடித்துள்ள காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க, இசையமைப்பாளர் ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

  கதைக்களம்
  பள்ளிப்பருவத்தில் நடக்கும் காதலை, இளைஞர்கள் ரசிக்கும்படியான படமாக இயக்கியிருக்கிறார் ஒமர் லூலு. இளைஞர்கள் தனது பள்ளி, கல்லூரி காலங்களில் யாரிடமும் பகிர முடியாமல் இருக்கும் ரகசியங்கள் பற்றி இந்த படத்தில் பேசியிருக்கிறார்கள்.

  கதை 
  பள்ளியில் 11-வது படிக்கும் ரோஷனுக்கும், நூரின் ஷெரிப்புக்கும் இடையே நட்பு ஏற்படுகிறது. இந்த நிலையில், அதே பள்ளியில் சேரும் பிரியா வாரியரை பார்க்கும் ரோஷனுக்கு அவள் மீது காதல் ஏற்டுகிறது.

  ஒரு கட்டத்தில் இருவருமே காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். ரோஷன், நூரின் ஷெரிப்புடன் தோழமையாக பழகுவது பிரியா வாரியருக்கு பிடிக்காமல் போக, இருவருக்கும் இடையே விரிசல் ஏற்டுகிறது. பிரியா வாரியருடன் மீண்டும் இணைய நினைக்கும் ரோஷன், நூரின் ஷெரிப்புடன் நெருக்கமாக பழகுவது போல நடிக்கிறார். ஒரு கட்டத்தில் ரோஷன் - நூரின் ஷெரிப் இடையே நெருக்கம் அதிகமாகி காதலாகிறது.

  காதல் காட்சிகளில் ரோஷன், பிரியா வாரியர் இளைஞர்களை கவர்கின்றனர். இருப்பினும் இரண்டாவது பாதியில், அனைவரையும் கவர்ந்து ரசிகர்களின் கவனத்தை தன்வசமாக்குகிறார் நூரின் ஷெரிப். கடைசியில், ரோஷன் யாருடன் இணைந்தார்? யார் காதல் வெற்றி பெற்றது? என்பதே படத்தின் மீதி காதல் கதை.
  **Note:Hey! Would you like to share the story of the movie ஒரு அடார் லவ் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).