X
தமிழ் » திரைப்படங்கள் » ஒரு அடார் லவ்
ஒரு அடார் லவ்

ஒரு அடார் லவ்

Drama | Romance | 14 Feb 2019 | U/A | 145 Mins
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

ஒரு அடார் லவ் கதை

ஒரு அடார் லவ் இயக்குனர் ஒமர் லுலு இயக்கத்தில் பிரியா பிரகாஷ் வாரியர் மற்றும் முகமத் ரோஷன் நடித்துள்ள காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க, இசையமைப்பாளர் ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார். கதைக்களம் பள்ளிப்பருவத்தில் நடக்கும் காதலை, இளைஞர்கள் ரசிக்கும்படியான படமாக இயக்கியிருக்கிறார் ஒமர் லூலு. இளைஞர்கள் தனது பள்ளி, கல்லூரி காலங்களில் யாரிடமும் பகிர முடியாமல் இருக்கும் ரகசியங்கள் பற்றி இந்த படத்தில் பேசியிருக்கிறார்கள். கதை  பள்ளியில் 11-வது படிக்கும் ரோஷனுக்கும், நூரின் ஷெரிப்புக்கும் இடையே நட்பு ஏற்படுகிறது. இந்த நிலையில், அதே பள்ளியில் சேரும் பிரியா வாரியரை பார்க்கும் ரோஷனுக்கு அவள் மீது காதல் ஏற்டுகிறது. ஒரு கட்டத்தில் இருவருமே காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். ரோஷன், நூரின் ஷெரிப்புடன் தோழமையாக பழகுவது பிரியா வாரியருக்கு பிடிக்காமல் போக, இருவருக்கும் இடையே விரிசல் ஏற்டுகிறது. பிரியா வாரியருடன் மீண்டும் இணைய நினைக்கும் ரோஷன், நூரின் ஷெரிப்புடன் நெருக்கமாக பழகுவது போல நடிக்கிறார். ஒரு கட்டத்தில் ரோஷன் - நூரின் ஷெரிப் இடையே நெருக்கம் அதிகமாகி காதலாகிறது. காதல் காட்சிகளில் ரோஷன், பிரியா வாரியர் இளைஞர்களை கவர்கின்றனர். இருப்பினும் இரண்டாவது பாதியில், அனைவரையும் கவர்ந்து ரசிகர்களின் கவனத்தை தன்வசமாக்குகிறார் நூரின் ஷெரிப். கடைசியில், ரோஷன் யாருடன் இணைந்தார்? யார் காதல் வெற்றி பெற்றது? என்பதே படத்தின் மீதி காதல் கதை.
Read More

ஒரு அடார் லவ் நடிகர்கள் & படக்குழுவினர்

ஒரு அடார் லவ் அணியின் தகவல்

இயக்குனர் ஒமர் லுலு
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஷான் ரஹ்மான்
தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணு
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ஒரு அடார் லவ் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
ஒரு பள்ளி வகுப்புறையில் சில பல கேமராக்களை பொருத்தி வைத்து, கேன்டிட்டாக பதிவு செய்தால் எப்படி இருக்குமோ, அப்படித் தான் இருக்கிறது ஒரு அடார் லவ். பதின்வயது பள்ளி மாணவர்கள், ஒருவருக்கொருவர் எப்படி ஈர்க்கப்பட்டு காதலில் விழுவார்கள், அவர்களுக்குள்ளான நட்பு, காதல், காமெடி, சண்டை என எல்லாமே மிக எதார்த்தமாக இருக்கிறது. வாட்ஸ்அப், பேஸ்புக், டிவிட்டர்னு ஏற்கனவே நம்ம பசங்க பண்ணும் அலம்பல் தாங்க முடியல. இதுல இந்த படத்த வேற பார்த்துட்டு வந்து என்ன பண்ண போறாங்களோ என்ற எண்ணம் தான் ஒரு அடார் லவ் பார்க்கும் பெற்றோருக்கு ஏற்படும். ஆனால் இது அவர்களுக்கான படம் அல்ல. இளமை காதலின் இனிமையை ருசிக்க காத்திருக்கும் இளைஞர்களின் கொண்டாட்டம் தான் ஒரு அடார் லவ்.

ஒரு அடார் லவ் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ஒரு அடார் லவ்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+