“தனுஷ் தான் என்னோட ஆல்டைம் Crush… அடுத்து அவரு கூட தான்?”: கொளுத்திப் போட்ட மலையாள நடிகை!
பெங்களூரு: மலையாளத்தில் 2018ம் ஆண்டு வெளியான 'தனாஹா' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பிரகாஷ் வாரியர்.
2019ல் வெளியான 'ஒரு ஆடார் லவ்' படம் வெளியான பிறகு பிரியா பிரகாஷ் வாரியரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பிரியா பிரகாஷ் வாரியர் கொடுத்த பேட்டியில் தனது கிரஷ் யார் என்பது குறித்து பேசியுள்ளார்.

பிரியா பிரகாஷ் வாரியர்
மலையாளத்தில் வெளியான 'ஒரு அடார் லவ்' படத்தில் இடம்பெற்ற 'மாணிக்ய மலரே பூவி' என்ற பாடலில் நடித்து பிரபலமானவர் பிரியா வாரியர். அதில், அவரது கண் சிமிட்டல் ரசிகர்களை சொக்க வைத்தது. அதன் மூலம் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஏராளமான ஃபாலோயர்கள் கிடைத்தனர். இன்ஸ்டாகிராமில் மட்டும் 70 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலேவார்ஸ் இருந்தனர். ஆனால் திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து அவர் விலகி விட்டார்.

தனுஷின் தீவிர ரசிகை
இன்ஸ்டாகிராமிலிருந்து விலகினாலும் டிக்டாக்கில் பிரியா வாரியருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். டிக்டாக் தடை செய்யப்படுவதற்கு முன்னர், தனுஷ் படங்களின் வசனத்திற்கு டிக்டாக் செய்து கலக்கி வந்தார் பிரியா வாரியர். தனுஷின் தீவிர ரசிகையான பிரியா வாரியரின் டிக்டாக் வீடியோக்கள் பெரும்பாலும் தனுஷ் படங்களில் உள்ள காட்சிகளாகவே இருக்கும். அந்தளவிற்கு தனுஷ் மீது பைத்தியமாக இருந்தார் பிரியா வாரியர்.

தனுஷ் தான் என்னோட கிரஷ்
இந்நிலையில், சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பிரியா வாரியர் பேட்டிக் கொடுத்துள்ளார். அதில், சில தினங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த ஃபிலிம் பேர் விருது விழாவில் கலந்துகொண்டது பற்றியும், சிவப்பு கம்பளே வரவேற்பில் பங்கேற்றது குறித்தும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். மேலும், தனுஷ் குறித்து கேட்டதற்கு, அவர்தான் என்னுடைய ஆல்டைம் ஃபேவரைட் என்றும், தனுஷ் மீது தனக்கு அதிகமான கிரஷ் உள்ளதாகவும் வெளிப்படையாக தெரிவித்தார். 22 வயதேயான இளம் நடிகை தனுஷுக்கு தூண்டில் போடுவது ரசிகர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சேர்ந்து நடிக்க விருப்பம்
மேலும், தனுஷுடன் சேர்ந்து நடிப்பதே தனது விருப்பம் எனவும், அவரின் 'தி கிரே மேன்', 'திருச்சிற்றம்பலம்' படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். பிரியா வாரியரின் ஆசை விரைவில் நிறைவேறுமா, தனுஷுடன் ஜோடி சேர்வாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். தற்போது கன்னடத்தில் விஷ்ணு பிரியா படத்திலும், இந்தியில் 3 படங்களிலும் நடித்து வருகிறார் பிரியா வாரியர். இந்தப் படங்களை முடித்துவிட்டு விரைவில் தனுஷுடன் நடிக்க முயற்சி எடுப்பார் என தெரிகிறது. தனுஷ் தற்போது கேப்டன் மில்லர், வாத்தி, சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம் என பிஸியாக இருந்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











