ஒரு குப்பை கதை கதை

  ஒரு குப்பை கதை தமிழ் குடும்பத் திரைப்படம். இத்திரைப்படத்தை காளி  ரங்கசாமி இயக்க, தினேஷ் மாஸ்டர், மனிஷா யாதவ் மற்றும் ஆதிரா  போன்றோர் நடித்துள்ளனர். சாதாரண குடும்பங்களில் நடக்கும் சிறு சிறு பிரச்சனைகளை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

  கதை : 

  ஓசூரில் உள்ள ஒரு வீட்டு விலாசத்தை தேடிப் போகும் குமார் (தினேஷ் மாஸ்டர்), போன இடத்தில் ஒரு கொலை செய்துவிட்டதாக போலீசில் சரணடையும் காட்சியுடன் தொடங்குகிறது படம். பிளாஷ்பேக் காட்சிகளுடம் கதை விரிகிறது.

  சென்னையின் கூவம் ஆற்றங்கரையோரும் உள்ள ஒரு குப்பத்தில் வசிக்கும் இளைஞர் குமார். சென்னை மாநகராட்சியில் குப்பை அள்ளும் தொழிலாளி. ஆனால் தனது வேலையை மனதார நேசிக்கும் மனிதர். சென்னையை சிங்கார சென்னையாக்கும் மனிதன் தான் என நெஞ்சை நிமிர்த்தி சொல்லும் அளவுக்கு வேலை மீது அளவு கடந்த பற்று வைத்திக்கிறார் குமார். ஆனால் அவரது வேலையே அவரது திருமணத்திற்கு தடையாக அமைகிறது. 

  வால்பாறையில் வசிக்கும் பூங்கொடியை(மனிஷா) பெண் பார்க்க போகிறார் தினேஷ். மாப்பிள்ளை சென்னையில் கிளர்க் வேலை செய்வதாக பெண் வீட்டாரிடம் தரகர் சொல்கிறார். இதை அறியும் தினேஷ், மனிஷாவின் தந்தையை தனியாக அழைத்து தான் ஒரு குப்பை அள்ளும் தொழிலாளி என்ற உண்மையை கூறுகிறார். இந்த நேர்மை பிடித்துபோக, மகளிடம் விஷயத்தை மறைத்து தினேஷுக்கு மனம் முடித்து வைக்கிறார்.

   சென்னைக்கு வரும் மனிஷாவுக்கு குப்பை வாழ்க்கை அருவருப்பாக இருக்கிறது. இருப்பினும் தினேஷுடன் நல்லமுறையில் குடும்பம் நடத்தி கர்ப்பமாகிறார். அப்போது தான் அவருக்கு தெரிய வருகிறது, தினேஷ் ஒரு குப்பை அள்ளும் தொழிலாளி என்று. அதிர்ச்சி அடையும் மனிஷா, வால்பாறைக்கு கிளம்ப முடிவு செய்கிறார். ஆனால் தந்தையின் சொல்லை ஏற்று, குப்பத்திலேயே வாழ தொடங்குகிறார். 

  மகப்பேறுக்காக தாய் வீட்டுக்கு செல்லும் மனிஷா, மீண்டும் சென்னை வர மறுக்கிறார். இதனால் குப்பத்தை விட்டு வெளியேறும் தினேஷ், அப்பார்ட்மென்ட் ஒன்றில் குடியேறி, மனைவி மற்றும் குழந்தையுடன் வாழத்தொடங்குகிறார். எதிர் பிளாட்டில் தனியாக வசிக்கும் பணக்கார இளைஞன் அர்ஜூன் (சுஜோ மேத்யூஸ்) மீது மனிஷாவுக்கு ஈர்ப்பு வருகிறது. இதை பயன்படுத்திக்கொள்ளும் அர்ஜூன், மனிஷாவையும், குழந்தையையும் அழைத்து கொண்டு ஊரைவிட்டு ஓடிவிடுகிறார். 

  இதனால் மனமுடையும் தினேஷ், குடிகாரனாகி வாழ்வை தொலைக்கிறார். தினேஷ், தனது மனைவி மற்றும் குழந்தையை தேடி கண்டுபித்தாரா? அவர் யாரை கொலை செய்கிறார்? ஏன் செய்கிறார் என்பது மீதிக்கதை.
  **Note:Hey! Would you like to share the story of the movie ஒரு குப்பை கதை with us? Please send it to us (popcorn@oneindia.co.in).