பஞ்சராக்ஷரம் இயக்குனர் பாலாஜி வைரமுத்து இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், மது ஷாலினி, சனா அல்தாப், அஸ்வின் ஜெறோமே மற்றும் கோகுல் நடிக்கவிருக்கும் த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் வைரமுத்து தயாரிக்க, இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி கே எஸ் இசையமைத்துள்ளார்.
பஞ்சராக்ஷரம் படத்தின் தகவல்கள்
சம்மந்தம் இல்லாமல் இனையும் ஐந்து பேர் அவர்களுக்குள் ஒரு நல்ல ஒற்றுமை ஏற்படுகிறது ,ஐவரும் ஒரு ஜீப் மற்றும் இருசக்கர வாகனத்தில் ஊர் சூற்றும் வழியில் ஒருவருக்கு ஒருவர் இனைந்து கொள்கின்றனர். நெருக்கமாகிய பிறகு அவர்கள் ஒரு விளையாட்டை விளையாட திட்ட மிடுகிறார்கள் .அது என்னவென்றால் ஒரு புத்தகம் கிடைகிறது அது கடந்த காலத்தை வைத்து எதிர்காலத்தை கணிக்கும் ஒரு புத்தகமாக இருக்கிறது அதனை வைத்து ஒரு விபரீத விளையாட்டுக்குள் நுழைகிறார்கள்.
அந்த விளையாட்டு பல திடுக்கிடும் சம்பவங்களுக்கு கதையை எடுத்து செல்கிறது ,அதன்பின் தொடரும் பல விசயங்கள் நம்மை ஆச்சரியம் ஊட்டவைக்கும் விசயங்களாகவும் அதிசயமான விசயங்களாகவும் இருக்கின்றன . மனிதனின் நம்பிக்கை எந்த உச்சத்திற்கும் வேண்டுமானலும் எடுத்து செல்லும் அதே நேரத்தில் ஒரு மனிதனின் கெட்ட சிந்தனைகள் மிக பெரிய ஆபத்தையும் கொண்டு வரும் என்று கதை எடுத்து கூறுகிறது.