பாபநாசம் 2 இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல் ஹாசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரில்லர் திரைப்படம். இப்படம் 2015 ஆம் ஆண்டு கமல்ஹாசன் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் மலையாள சினிமாவில் மெகாஹிட் படமான "திரிஷ்யம்" படத்தின் தமிழ் ரீமேக் படமான "பாபநாசம்" படத்தின் தொடர்ச்சி ஆகும்.
இப்படத்தில் கமல் ஹாசனுடன் நிவேதா தாமஸ், எஸ்தர் அனில், ஆஷா ஷரத், ஆனந்த் மஹாதேவன் என பலர் நடிக்கின்றனர். முதல் பாகத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த ராணி (கவுதமி) கதாபாத்திரத்தில் தற்போது உருவாகும் பாபநாசம் இரண்டாம் பாகத்தில் நடிகை நதியா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதன் முதலாக இப்படத்தின் மூலம் கமல்ஹாசன் - நதியா இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.
இப்படத்தில் பணியாற்றியிருக்கும் நடிகர் / நடிகைகள் மற்றும் படக்குழு பற்றிய தகவல்கள் அதிகாரப்பூர்வமாக பின்னர் அறிவிக்கப்படும்.
பாபநாசம் 2 திரைப்படத்தின் பிரத்யேக தகவல்கள்
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால் நடிப்பில் உருவான திரிஷ்யம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 2021 ஆம் ஆண்டு அமேசான் ஆன்லைன் ஓடிடி-யில் நேரடியாக வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. திரிஷ்யம் திரைப்படம் தமிழில் பாபநாசம், கன்னட மொழியில் திரிஷ்ய, தெலுங்கு மொழியில் துருஷ்யம், ஹிந்தியில் திரிஷ்யம் என ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி அணைத்து மொழிகளிலும் பிளாக்பஸ்டர் திரைப்படமாக வெற்றி பெற்றுள்ளது.
பாபநாசம் 2 திரைப்படமும் நேரடியாக அமேசான் ஆன்லைன் ஓடிடி-யில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.