பார்க்கிங் - இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம் எஸ் பாஸ்கர், இளவரசு, பிரதான நாதன், ராமா என பல பிரபலங்கள் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தமிழ் சினிமா தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் மற்றும் கே எஸ் சினிஷ் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.
திரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள பார்க்கிங் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். 2023 டிசம்பர் 01ல் வெளியாகியுள்ள இப்படத்திற்கு தமிழ் திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.
பார்க்கிங் திரைப்படத்தின் கதை
சென்னையில் ஐ.டி துறையில் பணியாற்றி வரும் ஹரிஷ் கல்யாண் தன் மனைவி இந்துஜா-வுடன் சென்னையில் ஒரு வீட்டில் குடிபெயர்கிறார். அதே வீட்டில் கீழ் போர்ஷன்-ல் இருக்கும் எம் எஸ் பாஸ்கர் தொடக்கத்தில் ஹரிஷ் உடன் நண்பராக பழகி வருகிறார்.
ஹரிஷ் கல்யாண் புதிதாக ஒரு கார் வாங்க, அதனை எங்கு நிறுத்த வேண்டும் என ஒரு சிக்கல் தொடங்குகிறது. தனது வீட்டில் நிறுத்த நினைக்கும் ஹரிஷ் கல்யாண் - எம் எஸ் பாஸ்கர் இடையே பிரச்சனை தொடங்குகிறது. யார் கார் அங்கு நிறுத்தவேண்டும் என்பது தான்.
இருவருக்கும் இடையே எழுந்த இந்த ஈகோ மோதலில் யார் யார் பாதித்தது? இதனால் இவர்களுக்கு எழுந்த சிக்கல்கள் என்ன என்பது தான் பார்க்கிங் திரைப்படத்தின் கதை.