twitter

    பேரன்பு கதை

    பேரன்பு இயக்குனர் ராம் இயக்கத்தில் மம்மூட்டி மற்றும் அஞ்சலி நடிக்கும் குடும்பத் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் பி எல் தேனப்பன் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    கதைச்சுருக்கம் 

    இயற்கையின் கொடூரமான முனையில் ஆரம்பித்து, 'பேரன்பு' எனும் மற்றொரு முனையில் படத்தை இணைத்திருக்கிறார் இயக்குனர் ராம்.

    கதை 

    இப்படத்தில் மம்மூட்டி(அமுதவன்) துபாயில் வேலை செய்து வருகிறார். இவருக்கு மகள் பிறந்திருப்பதாகவும் ஆனால் மூளை முடக்கு வாதம் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறுகிறார்கள். மகள் இப்படி மாற்று திறனாளியாக பிறந்து விட்டாலே என்பதால் அவர் தன் மகளை கூட பார்க்க வராமல் இருந்து விடுகிறார். மம்மூட்டியின் மனைவியே குழந்தையை வளர்க்கிறார். ஒரு கட்டத்தில் இனியும் என்னால் பெண்ணை பார்த்து கொள்ள முடியாது என்று வேறொரு வாழ்க்கையை தேடி சென்று விடுகிறார்.

    மனைவி பிரிந்து சென்றுவிட மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள பதின் வயது மகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு மம்மூட்டிக்கு (அமுதவன்) ஏற்படுகிறது. சொந்தபந்தங்கள், அக்கம் பக்கத்து வீட்டாரின் பிடுங்கல்களினால் பாப்பாவை (தங்கமீன்கள் சாதனா) அழைத்துக்கொண்டு ஆள் அரவமற்ற ஓர் இடத்துக்கு இடம்பெயர்கிறார். அங்கு இயற்கையின் அற்புதங்களைக் காண்கிறார். தன்னை வெறுக்கும் மகளின் பாசம் தந்தைக்கு கிடைக்கிறது. ஆனால் நிறைய சங்கடங்களைச் சந்திக்க நேரிடுகிறது. அதன் வழியே பல உணர்வுகளையும், வாழ்வின் யதார்த்தங்களையும் நம்முள் கடத்தி பயணிக்கிறது படம்.
    **Note:Hey! Would you like to share the story of the movie பேரன்பு with us? Please send it to us ([email protected]).