twitter

    பொன்மகள் வந்தாள் கதை

    பொன்மகள் வந்தாள் இயக்குனர் ஜே.ஜே. பிரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாண்டியராஜன், பாக்கியராஜ் என திரையுலக பிரபல முன்னணி நடிகர்கள் பலர் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை நடிகர் சூர்யா தனது 2டி என்டேர்டைன்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த இசையமைத்துள்ளார். 

    நீதிமன்றத்தில் ஒரு குற்றத்தினை சார்ந்து நடக்கும் விசாரணை மற்றும் வாக்குவாதம் என ஒரு பெண் வழக்கலங்கரின் வாழ்க்கையை பற்றி உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் படத்தொகுப்பாளர் ரூபென் இணைந்து பணியாற்றியுள்ளனர்.



    பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் கதைக்கரு

    சிலரின் சூழ்ச்சி மற்றும் ஆதிக்கத்தால் பரிதாபமாக ஒரு பெண் கொலை செய்யப்படுகிறார். பின் அந்த பெண்ணின் மேல் சில குற்றங்களையும் பதிவு செய்து ஒரு குற்றவாளியாக சித்தரித்து அந்த வழக்கினை முடிக்கின்றனர் அதிகாரிகள். அந்த பெண்ணிற்காக 15 வருடங்களுக்கு பின் வழக்கு தொடர்ந்து நீதிக்காக போராடுவதே இப்படத்தின் கதை கரு.

    பொன்மகள் வந்தாள் ரிலீஸ்

    நடிகை ஜோதிகா முக்கிய முன்னணி கதாபாத்திரத்தில் உருவாகியுள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படமானது திரையரங்குகளில் 2020 மார்ச் மாதம் வெளியாகவிருந்தது. அச்சமயம் தமிழகத்தில் திரையரங்குகள் தாற்காலியமாக மூடப்பட்ட நிலையில் இப்படம் அறிவிப்புகள் இன்றி சில வெளியீட்டு தேதி மாற்றப்பட்டது. பின்னர் இப்படத்தின் தயாரிப்பாளர் இணையதள திரைப்பட பக்கங்களான "ஓ.டி.டி" என்னும் துறையில் அதிகாரப்பூர்வமாக 2020 மே 29ல் வெளியாகும் என அறிவித்தார்.

    இதற்காக கோலிவுட் திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்கள் சார்பில் இப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சூர்யாவிற்கு நோட்டீஸ் மற்றும் தயாரிப்பு சங்கம் சார்பில் எச்சரிக்கை அளிக்கப்பட்டது. இருப்பினும் நடிகர் சூர்யா ஒரு-தலையாக தனது முடிவில் உறுதியாக இருந்து இப்படத்தினை இணையதள ஓ.டி.டி பக்கமான அமேசான் பக்கத்தில் 2020 மே 29ல் வெளியிட முடிவு செய்துள்ளார்.

    பொன்மகள் வந்தாள் படத்தின் அறிவிப்புகள்

    இப்படமானது 2019 ஜூலை மாதம் அதிகாரப்பூர்வமாக நடிகர் சூர்யாவின் ட்விட்டர் பக்கத்தில் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் போஸ்டரில் இப்படத்தின் பற்றிய அறிவிப்புகள் வெளியானது. பின்னர் 2020 மே மாதம் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று பிரபலமாகியுள்ளது.

    பொன்மகள் வந்தாள் படத்தின் கதை

    2004-ஆம் ஆண்டு ஊட்டியில் ஒரு 10 வயது குழந்தையை துப்பாக்கி முனையில் ஜோதி என்ற பெண் கடத்தியதாகவும், பின் அந்த குழந்தையை காப்பாற்ற சென்ற இரு இளைஞர்களையும் ஜோதி சுட்டுக் கொன்று அங்கிருந்து ஜோதி தப்பித்ததாகவும் கூறி போலீஸார் வழக்கினை பதிவு செய்துள்ளனர்.

    அந்த ஜோதி திருப்பூரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் அந்த பெண்யை தேடி செல்கின்றனர். அச்சமயம் ஜோதி திருப்பூரில் இருந்து ஜெய்ப்பூர் நகரத்திற்கு தப்பி செல்லும் நேரத்தில் அவளை பிடித்த போலீசார் அவளிடம் இருந்து அந்த குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்கின்றனர். அப்போது ஜோதி போலீசார் ஒருவரை சுட பதிலுக்கு காவலர்கள் ஜோதியை சுட்டு கொன்றுவிடுகின்றனர். ஜோதி ஒரு வடநாட்டு பெண், பணத்திற்காக குழந்தையை கடத்தியுள்ளார் கடத்தியுள்ளார் என போலீஸ் செய்தியாளர்கள் முன் தெரிவிக்கின்றனர்.

    வெண்பா (ஜோதிகா) இளம் வழக்கலைஞர், இவர் தனது முதல் வழக்காக 15 ஆண்டுகளுக்கு முன் நடந்த  ஜோதி வழக்கிற்காக வாதாட  முடிவெடுக்கிறார். இந்த வழக்கில் உள்ள சில உண்மைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் நோக்கில் இந்த வழக்கினை கையில் எடுத்துள்ளார் ஜோதிகா. இவருக்கு உறுதுணையாக ஜோதிகாவின் தந்தையான பெட்டிஷன் பெத்துராஜ் (பாக்கியராஜ்) இவருக்கு உறுதுணையாக நின்று ஊக்கமும் ஆக்கமும் கொடுத்து அவருக்கு உதவுகிறார்.

    ஒரு குழந்தையை கடத்தி கொன்ற ஒரு கொடூரமான கொலைகாரிக்காக வாதாடுகிறாள் என ஊட்டியில் உள்ள பொது மக்கள் ஜோதிகாவை எதிர்க்கின்றனர். சிலர் ஜோதிகாவின் இந்த செயலுக்காக மண்ணை வாரித் தூற்றி சாபமிட்டு, செருப்பினை வீசி அவமானப்படுத்திகின்றனர். இந்த அவமானங்களைத் தாண்டி ஏன் இந்த வழக்கைக் கையில் எடுக்கிறார், அதுவும் வழக்கறிஞராக ஜோதிகா வாதாடும் முதல் வழக்கு இதுதான்.

    உண்மையில் யார் அந்த ஜோதி?, எதற்காக ஜோதிகா 15 வருடங்களுக்கு முன் நடந்த இந்த வழக்கினை கையில் எடுத்துள்ளார்?, உண்மையில் நடந்தது என்ன? என்பதே 'பொன்மகள் வந்தாள்' படத்தின் சுவாரஸ்யம் மற்றும் பல திருப்பங்கள் கொண்டுள்ள திரைக்கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie பொன்மகள் வந்தாள் with us? Please send it to us ([email protected]).